வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான
நுகர்வோர்கள் இத்திட்டத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டாததால், எளிய நடைமுறையை பின்பற்றுவதற்காக வீடுகளுக்கு சிலிண்டர் கொண்டு செல்லும் டெலிவரி ஆட்களிடமே வங்கிக்கு அளிக்க வேண்டிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி, 53 லட்சம் பேர் நேரடி மானியம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள். இது தவிர தமிழகத்தில் 15 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் மானியம் பெறுவதற்கு, வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான நுகர்வோர்கள் இத்திட்டத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர்களும் நேரடி மானிய திட்டத்தில் சேர பல எளிய வழிகளை கையாண்டு வருவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment