Friday, 2 January 2015

ஓ.பி.சி., மாணவர்களுக்கு யு.ஜி.சி., உதவித்தொகை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,
அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் நிதி உதவியுடன் கூடிய இத்திட்டத்தை, 2014 - 15ம் கல்வியாண்டு முதல், யு.ஜி.சி., அறிமுகப்படுத்துகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரி கள், குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல், கலையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு களில் முழுநேர, பகுதி நேர, எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்பு களில் சேர்ந்தவர்களுக்கு, இந்த உதவித் தொகை வழங்கப்படும். இணையம் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களில், 300 பேருக்கு மட்டும், இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இத்தகவல்களை, யு.ஜி.சி., செயலர், ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.
- நமது நிருபர் -

0 comments:

Post a Comment