Thursday, 1 January 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜன.10ம் தேதி நடைபெறுகிறது

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு வருகிற 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

இத்தேர்வுக்கு விருதுநகர் மாவட்டத்திலிருந்து 5346 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு காலையில் 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 1 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்காக இம்மாவட்டத்தில் 11 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதில், விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூரில் எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, எத்தலால் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சிவகாசியில் எஸ்.எச்.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஹெச் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், எஸ்பிகே ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் என தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment