This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 31 December 2014

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ஓய்வு: புதிய தலைவராக ஷைலேஷ் நாயக் தற்காலிகமாக நியமனம்

ராதாகிருஷ்ணன் - ஷைலேஷ் நாயக்
இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றார்.

இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக ஷைலேஷ் நாயக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக கடந்த 2009-ம் ஆண்டு பொறுப்பேற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவிக்காலத்தில், பி.எஸ்.எல்.வி, மங்கள்யான், ஜி.எஸ்.எல்.வி., இன்சாட், ஜிசாட் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பத்தின் பல செயற்கைகோள்களும், ஏவுகணைகளும் இவரின் முயற்சியால் விண்ணில் ஏவப்பட்டன. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை வென்றுள்ள ராதாகிருஷ்ணன், 2014 ஆம் ஆண்டின் சிறந்த பத்து விஞ்ஞானிகளில் ஒருவராக பிரபல அறிவியல் இதழான நேச்சர் தேர்வு செய்தது.
செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், முதல் முயற்சியிலேயே, அதன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது ராதாகிருஷ்ணனின் சாதனை மகுடத்தில் ஒரு வைரக்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்ககல்விதுறையில் கவுன்சிலிங்கால் காலியான 300 பணியிடங்கள் .

தொடக்ககல்விதுறையில் கவுன்சிலிங்கால் காலியான 300 பணியிடங்கள் .


காவல்துறையில் அதிக பணியிடங்கள் காலியாக இருப்பதால் குரூப்–1 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்


சென்னை,
காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால், குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது என்று சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறினார்.
குரூப்–2 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–2 (தொகுதி–2–அ) அடங்கியுள்ள 2 ஆயிரத்து 760 காலி பணியிடங்களுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த 12–ந்தேதி வெளியிடப்பட்டு, கடந்த 29–ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கான துறை ஒதுக்கீடு ஆணை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.
தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் முதல் 10 இடங்களை பிடித்த ரெங்கநாதன் வெங்கட்ராமன், ஆர்.சிந்தியா, என்.ஆர்.ஜே.தினேஷ்குமார், ஜி.மகேஷ்வரி, ஜே.முகமது மீரா சாகிப், எம்.மைமூன்கனி, எப்.ஜே.அஸ்வினி, எஸ்.ராஜ்குமார், ஏ.சையத் அசார் அரபாத், எஸ்.ரம்யா ஆகியோருக்கு துறை ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். இதில் மகேஸ்வரி பி.எஸ்.சி, பட்டதாரி மற்ற அனைவரும் பொறியியல் பட்டதாரிகளாவார்கள். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:–
பொறியாளர்கள் சாதனை தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பெற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக குரூப்–2–அ தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு நேற்று துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 9 பேர் பொறியியல் பட்டதாரிகள்.
தொடர்ந்து 2 ஆயிரத்து 200 விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 200 விண்ணப்பதாரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தினசரி 200 பேர் வீதம் வரும் ஜனவரி 23–ந்தேதி வரை அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்–ஆப் மார்க் முறையில் இல்லாமல் ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
15 நாளில் தேர்வு முடிவுகள் தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள நேர்முக எழுத்தர் பதவிக்கு 108 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வின் போது தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம், பதிவுத்துறை, வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற 29 துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 760 பணியிடங்களில், 2 ஆயிரத்து 668 உதவியாளர், கணக்காளர், கீழ்நிலை எழுத்தர் பணியிடங்களும், 92 நேர்முக எழுத்தர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
குரூப்–1 தேர்வின் ஆரம்பகட்ட தேர்வு முடிவுகள் வரும் 15 நாள்களிலும், குரூப்–4 தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குரூப்–1 மெயின் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2015–ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்–1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பத்திரப்பதிவு துறை தேர்வு முதலிடத்தை பிடித்த டி.ரெங்கநாதன் வெங்கட்ராமன் கூறியதாவது:–
பெற்றோர்களின் ஆதரவும், மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் பேரில் தான் மாநிலத்தில் முதலிடத்தை பெற முடிந்தது. பொறியியல் பட்டதாரியான நான், குரூப்–2 தேர்வுக்காக தினசரி 10 மணிநேரம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். பத்திரப்பதிவு துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2–வது இடத்தை பிடித்த மதுரை பசுமலையைச் சேர்ந்த ஆர்.சிந்தியா கூறியதாவது:–
பொறியியல் பட்டதாரியான நான், குரூப்–1, குரூப்–2–அ தேர்வுகள் எழுதி உள்ளேன். இதில் குரூப்–2–அ தேர்வில் மாநிலத்தில் 2–வது இடத்தை பிடித்துள்ளேன். மகிழ்ச்சியை தரும் இந்த வெற்றிக்கு பின்னால் என்னுடைய பெற்றோரும், வழிகாட்டிய கல்வி நிறுவனத்துக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் பத்திரப்பதிவு துறையை தேர்வு செய்தாலும், குரூப்–1 தேர்வு முடிவு வெளியான பிறகு தான் எந்த பணியில் சேர்வது என்று தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

3–ம் பருவத்திற்கு 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறக்கும் போது விநியோகம்

சென்னை,
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அன்று 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

14 வகையான கல்வி பொருட்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்களை தமிழக அரசு, பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு வழங்கி வருகிறது.
மேலும் மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, அதன் காரணமாக காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2–வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3–வது பருவபுத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் ஆகியவை 1–ம் வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே வழங்கப்பட்டு வருகின்றன.
நாளை பள்ளிக்கூடம் திறப்பு அதன்படி அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2–ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழ்நாடு பாட நூல் நிறுவன நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.
திட்டமிட்டபடி பாடப்புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் மாணவ–மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த 2–ந்தேதி காலையிலேயே வழங்கப்படும் என்றும் மொத்தம் 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

TNPPGTA - WISHES TO ALL - HAPPY NEW YEAR 2015

PAY ORDER FOR 13 HM'S

PAY ORDER FOR 200 PET TEACHERS

Tuesday, 30 December 2014

HALF YEARLY EXAM - SS QUESTION PAPER

New Year's hour glass countdown animation

சிறப்பு ஆசிரியர்களுக்கான‌ சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,
உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகள் பலர் படித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு 2013-14-ம் ஆண்டு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

      இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, நேற்று 2013-14-ம் ஆண்டுக்கான சம்பளம் அந்தந்த ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத சம்பளமும் விரைவில் வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்

  மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 
           தமிழகத்தில் 128 புதிய தொடக்க பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் புதிய பணியிடங்களுக்கு மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான 'கவுன்சிலிங்' நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் இடையபட்டி, வாகைக்குளம், சோமசுந்தபுரம், ஜாரி உசிலம்பட்டி ஆகிய நான்கு புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் வடக்கம்பட்டி உயர்நிலை பள்ளி பணியிடங்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நேற்று 'கவுன்சிலிங்' நடந்தது.

                 இதுதொடர்பாக தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் தகவல் தெரிவித்து காலையில் பங்கேற்க உத்தரவிட்டனர். சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் அடித்து பிடித்து 'கவுன்சிலிங்கில்' பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர்.ஆசிரியர் ஒருவர் கூறுகையில் "இவ்வளவு அவசர அவசரமாக 'கவுன்சிலிங்' நடத்த வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை. மர்மமாக உள்ளது" என்றார்.

பல்கலை தேர்வு முறை மாற்றம்: ரத்து செய்யக்கோரி வழக்கு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் புதிய முறையில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வெளியான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை காமராஜ் பல்கலை கல்வி கவுன்சில் உறுப்பினர் விவேகானந்தன் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலை தேர்வு விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர்.,) அச்சடித்து வினியோகித்தல் மற்றும் தேர்வுக்கு முன், பின் ஆன்லைன் முறையில் தானாக மதிப்பீடு செய்யும் முறைக்கு டிச.,17 ல் பதிவாளர் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு சிண்டிகேட், செனட், கல்வி கவுன்சில் ஒப்புதல் பெற வேண்டும். டெண்டரில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற 50 கோடி ரூபாய் செலவாகும். தேர்வு நடைமுறையில் இம்மாற்றங்களை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த உள்ளனர். மாணவர்கள் சேர்க்கையின்போதே செய்திருக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பில் உள்நோக்கம் உள்ளது. விதிமுறைகளை பின்பற்றவில்லை. புதிய நடைமுறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய தடை விதிக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் லஜபதிராய் விசாரித்தார். பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

சென்னை: 'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



கடிதம்:

அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், மாணவர்கள் குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

* கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில், 2012 - 13ம் கல்வியாண்டில் இருந்து, பள்ளிகள் விவரங்கள் அடிப்படையில், தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதை சரிபார்த்து, நடப்பு கல்வியாண்டிற்கு, புதிய பள்ளிகள், விடுபட்ட பள்ளிகள் விவரங்களை பதிய வேண்டும்.

* 2014 - 15ல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தலைமை ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவுடன், விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆய்வு அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

* ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை, ஆதார் எண்களை பெற்று, கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில் பதிவு செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும், ஆதார் எண் பெற்ற, பெறாத மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை, ஆய்வு அலுவலர்கள் பெற்று, தகவல் மேலாண்மை முறை மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.


சிறப்பு முகாம்




* அதிகளவில் ஆதார் எண் பெறாத பகுதிகளை, மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்டறிந்து, அந்த பகுதி அல்லது மண்டலங்களில், மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.

* மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, எடை உயரம் ஆகிய விவரங்களை பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்

விருதுநகர்: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க,
மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்தாண்டுகளில், இத்தேர்வு விடைத்தாள்களில் தேர்வர்கள் தங்கள் பெயர், தேர்வு எண்ணை வட்டமிடுவர். அதில் சில இடங்களில் தவறு ஏற்பட்டது; சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், முறைகேடு களை தவிர்க்க, இம்முறை தேர்வர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், தேர்வு எண் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும் அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படி, கல்வித் துறை, கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கையை ஏற்ற அரசு, முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில், பெங்களூருவின் 250 பள்ளிகளிலும், மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில், 300 அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கர்நாடகா கல்வித் துறை கமிஷனர், முகம்மது மொஹிசின் கூறியதாவது: முதற்கட்டமாக, பெங்களூருவின், 250 அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்த, ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டு உள்ளது. சில வாரங்களில், டெண்டர் செயல்பாடு முடிவடையும். மாணவியர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, 'சிசிடிவி' கேமரா பொருத்த, நடவடிக்கை எடுக்கப்படும். பின், 2ம் கட்டமாக, மற்ற மாவட்டங்களில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் உள்ள அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும். அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படி, அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள அரசு, முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. இந்த தொகையில், 550 பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. படிப்படியாக, மாநிலத்தில், அனைத்து அரசு பள்ளிகளிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும். தற்போது, மாணவியர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஜன., 1ம் தேதி முதல் காஸ் சிலிண்டர் மானியம் அமலாகிறது: 27 மாவட்டங்களில் செயல்படுத்த திட்டம்

பெங்களூரு: சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானிய தொகை வழங்கும் நேரடி பணப் பரிமாற்ற திட்டம், ஜன., 1ம் தேதி முதல், பெங்களூரு உட்பட, 27 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் துவங்கிய பின், வாடிக்கையாளர்கள், மார்க்கெட் விலையை செலுத்தி, சமையல் காஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ள வேண்டும். மானியத்தொகை, நேரடியாக, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


நேரடி பண மாற்றம்:

புத்தாண்டின் முதல் நாளிலிருந்தே, பெங்களூரு உட்பட, 27 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மைசூரு, துமகூரு மாவட்டத்தில், கடந்த, நவ., 15ம் தேதியில் இருந்து, நேரடி பண பரிமாற்றம் திட்டம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு, 7.50 லட்சம் பேர், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானிய தொகை பெற, ஆதார் எண் கட்டாயமல்ல. வாடிக்கையாளர்கள், தம் வங்கி கணக்கு விவரங்களை, ஏஜன்சிகளிடம் வழங்கினால் போதும்.


மூன்று மாதம் அவகாசம்:

கர்நாடகாவில், இன்டேன், எச்.பி., பி.பி.சி., ஆகிய நிறுவனங்களில், 1.1 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள், நேரடி பணப் பரிமாற்றம் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள, மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. ஜன., 1ம் தேதியில் இருந்து, மார்ச் 31க்குள், இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதுவரை, மானிய தொகையில் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும். பின், மார்க்கெட் விலை செலுத்தி, காஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள், தம் வங்கி கணக்கு விவரங்களை, சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜன்சிகளிடம் வழங்க வேண்டும். ஏஜன்சிகள் வழங்கும் நிர்ணயித்த படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, வாடிக்கையாளர்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. வாடிக்கையாளர்கள், ஆதார் எண்ணையும் வழங்கலாம். ஆனால், அது கட்டாயமல்ல. ஏஜன்சிகளிடம் ஆதார் எண்ணை வழங்குபவர்கள், வங்கிக்கும், அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும். வரும், 2015 மார்ச் 31ம் தேதிக்குள், வங்கி கணக்கு விவரத்தை சிலிண்டர் ஏன்சிகளிடம் தெரிவிக்க சாத்தியமாகாதவர்கள், கவலைப்பட தேவையில்லை. தம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க, ஜூன் 30ம் தேதி வரை நேரம் உள்ளது.


மார்கெட் விலை:

இதற்கு, 'பார்க்கிங் பிரீயட்' என்று பெயர். இந்த காலத்தில் மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது. மார்க்கெட் விலையை செலுத்தி, பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு, ஜூன் 30க்குள், வங்கி கணக்கை சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜன்சிகளிடம் வழங்கி, நேரடி பணபரிமாற்றத் திட்டத்தில் இணைத்தால், மார்க்கெட் விலையில், எத்தனை சிலிண்டர்கள் வாங்கப்பட்டனவோ, அந்தளவு மானிய தொகை, ஒரே நேரத்தில், வாடிக்கையாளர் கணக்கில் செலுத்தப்படும். நிர்ணயித்த கால கெடுவுக்குள், வங்கி கணக்கு விவரங்களை இணைக்காவிட்டால், மானிய தொகை கிடைக்காது. வங்கி கணக்கு விவரத்தை, எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோக ஏஜன்சிகளுக்கு தாக்கல் செய்த வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதன் பின், மானிய தொகை செலுத்தப்பட்டது உட்பட, அனைத்து விவரமும் எஸ்.எம்.எஸ்., மூலமாகவே அனுப்பப்படும். எனவே, வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் நம்பரை, ஏஜன்சியிடம் தெரிவிப்பது நல்லது என, உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கவுன்சிலிங்கில் முறைகேடு:ஆசிரியர்கள் போராட்டம் - DINAMALAR

திண்டுக்கல்: திண்டுக்கல் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.



திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 10 தொடக்க பள்ளிகள் துவங்கப்பட்டன. 2 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. புதிதாக உருவான தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதவிஉயர்வு கவுன்சிலிங் திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்தர்ஷீலா தலைமை வகித்தார். இதில் 12 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் பெரியசாமி தலைமையில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை கண்டுகொள்ளாமல் அலுவலகத்தை விட்டு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வெளியேறியதால் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் விவேகானந்தன் கூறியதாவது: "பரளிபுதூரில் இடைநிலைஆசிரியராக கவிதா பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட பட்டதாரிஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து முறையிட்டதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்காமல் கவுன்சிலிங் நடத்தியுள்ளனர்,' என்றார். மாவட்ட கல்வி அலுவலர் எஸ்தர்ஷீலா கூறுகையில், ""சீனியாரிட்டி பட்டியலில் உள்ளபடி கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. எந்த முறைகேடும் நடக்கவில்லை,'' என்றார்.

குரூப்-1 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

சென்னை,

காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது என்று
சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் நேற்று கூறினார்.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி-2-அ) அடங்கியுள்ள 2 ஆயிரத்து 760 காலி பணியிடங்களுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டு, கடந்த 29-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கான துறை ஒதுக்கீடு ஆணை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் முதல் 10 இடங்களை பிடித்த ரெங்கநாதன் வெங்கட்ராமன், ஆர்.சிந்தியா, என்.ஆர்.ஜே.தினேஷ்குமார், ஜி.மகேஷ்வரி, ஜே.முகமது மீரா சாகிப், எம்.மைமூன்கனி, எப்.ஜே.அஸ்வினி, எஸ்.ராஜ்குமார், ஏ.சையத் அசார் அரபாத், எஸ்.ரம்யா ஆகியோருக்கு துறை ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். இதில் மகேஸ்வரி பி.எஸ்.சி, பட்டதாரி மற்ற அனைவரும் பொறியியல் பட்டதாரிகளாவார்கள். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

பொறியாளர்கள் சாதனை

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பெற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக குரூப்-2-அ தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு நேற்று துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 9 பேர் பொறியியல் பட்டதாரிகள்.

தொடர்ந்து 2 ஆயிரத்து 200 விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 200 விண்ணப்பதாரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தினசரி 200 பேர் வீதம் வரும் ஜனவரி 23-ந்தேதி வரை அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்-ஆப் மார்க் முறையில் இல்லாமல் ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

15 நாளில் தேர்வு முடிவுகள்

தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள நேர்முக எழுத்தர் பதவிக்கு 108 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வின் போது தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம், பதிவுத்துறை, வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற 29 துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 760 பணியிடங்களில், 2 ஆயிரத்து 668 உதவியாளர், கணக்காளர், கீழ்நிலை எழுத்தர் பணியிடங்களும், 92 நேர்முக எழுத்தர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குரூப்-1 தேர்வின் ஆரம்பகட்ட தேர்வு முடிவுகள் வரும் 15 நாள்களிலும், குரூப்-4 தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குரூப்-1 மெயின் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பத்திரப்பதிவு துறை தேர்வு

முதலிடத்தை பிடித்த டி.ரெங்கநாதன் வெங்கட்ராமன் கூறியதாவது:-

பெற்றோர்களின் ஆதரவும், மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் பேரில் தான் மாநிலத்தில் முதலிடத்தை பெற முடிந்தது. பொறியியல் பட்டதாரியான நான், குரூப்-2 தேர்வுக்காக தினசரி 10 மணிநேரம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். பத்திரப்பதிவு துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2-வது இடத்தை பிடித்த மதுரை பசுமலையைச் சேர்ந்த ஆர்.சிந்தியா கூறியதாவது:-

பொறியியல் பட்டதாரியான நான், குரூப்-1, குரூப்-2-அ தேர்வுகள் எழுதி உள்ளேன். இதில் குரூப்-2-அ தேர்வில் மாநிலத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளேன். மகிழ்ச்சியை தரும் இந்த வெற்றிக்கு பின்னால் என்னுடைய பெற்றோரும், வழிகாட்டிய கல்வி நிறுவனத்துக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் பத்திரப்பதிவு துறையை தேர்வு செய்தாலும், குரூப்-1 தேர்வு முடிவு வெளியான பிறகு தான் எந்த பணியில் சேர்வது என்று தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

TNPPGTA - WISHES ALL ITS VIEWERS A ADVANCE HAPPY NEW YEAR 2015


வரலாறு பாடத்தை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க கோரிக்கை


சிவகங்கை,டிச.30-இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன்
தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் உள்ள அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் வரலாறு ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முதுகலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில் 1:3 என்ற முரண்பாடான விகிதாச்சார முறை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011-ல் சென்னையில் நடைபெற்ற முதுகலை வரலாறு ஆசிரியர் கலந்தாய்வில் வரலாற்றில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் வேறுபாடமும், முதுகலையில் வரலாறு பட்டமும் பெற்றவர்களுக்கு 3 பணியிடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு பதவி உயர்வில் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. வழக்குமேலும் கடந்த 2012-ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடும் போது தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகம் முரண்பாடான விகிதாச்சார முறையை தொடரக்கூடாது என வேண்டுகோள் விடுத்தது. மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குனர் எங்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டார். இதற்கிடையில் 2014-ம் ஆண்டு நிலவரப்படி 1:3 க்கு என்ற முரண்பாடான விகிதாச்சார முறையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதுகுறித்து மீண்டும் தொடரப்பட்ட வழக்கில் தற்போது வழங்கப்பட்ட முதுகலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்துஎனவே இளநிலை, முதுகலையில் வேறு வேறு பாடங்களை படித்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி தயாரிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்து இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக எடுத்து படித்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வு பட்டியலை தயாரிக்க வேண்டும். அதன்பின்னர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Monday, 29 December 2014

முதுகலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு


சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2015-16ம் கல்வியாண்டில் எம்.டி, எம்.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் PGCET-2015 நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 9 கடைசி. நுழைவுத்தேர்வு ஜனவரி 21ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல்தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

2014–ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்

சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய் கிரக ஆய்வுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் 24–ந் தேதி
வெற்றிகரமாக செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் செவ்வாய் கிரக ஆய்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஒரே நாடு என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்தியா எட்டியது.
அடுத்ததாக உள்நாட்டிலேயே கிரயோஜனிக் என்ஜினை வெற்றிகரமாக தயாரித்து சாதனை படைத்துள்ளது. அத்துடன், மிக நீளமானதும், எடை அதிகம் கொண்டதுமான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் கடந்த 18–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த வெற்றிகளால் விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் சிறந்து விளங்குகின்றனர். இதை மெய்ப்பிக்கும் விதமாக பிரபல ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டுள்ள 2014–ம் ஆண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனின் பெயர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்த கவுரவத்தை பெற்றுள்ள முதல் இந்தியர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்:பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர்:கனமழை தொடர்வதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

தொழில்நுட்ப அறிவுக்கு முக்கியத்துவம்,கணினி இனி அவசியம்; கவனிக்குமா அரசு!

கோவை: போட்டிகள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் முற்றிலும் அல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த 'கனெக்டிவ்- கிளாஸ் ரூம்' திட்டம்,
மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வினியோகம், பள்ளிகளுக்கு லேப்-டாப் மற்றும் கம்ப்யூட்டர் வினியோகம் என முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.அடிப்படை தொழில்நுட்ப அறிவை புகுத்தாமல், மாணவர்கள் கைகளில் லேப்-டாப் வழங்குவது எதிர்மறை விளைவுகளையே தற்போது உருவாக்கி வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், மேல்நிலை வகுப்புகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தனியார் பள்ளிகளில் துவக்க வகுப்பு முதலே அடிப்படை கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், பயன்பாடு என படிப்படியாக கற்பிக்கப்படுகிறது.

ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்ற பின்பே அடிப்படை இயக்கங்களை கூட கற்க முடிகின்றது. இதனால், போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பில் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவில், கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்களை அரசு வினியோகித்து வருகிறது. அதில், பாடம் கற்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், எந்த ஒரு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்பதை அரசு உணர்வது அவசியம். மேலும், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், குறைந்தபட்சம் பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமித்து, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும். அதன் பின்பே, கனெக்டிவ் - கிளாஸ் ரூம் போன்ற திட்டங்களில் வெற்றி பெற இயலும்.கோவை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் கொள்முதல் செய்ய, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி ஆசிரியர்கள் இல்லாததால், வீணாகி வருகிறது.

கல்வியாளர் பாரதி கூறுகையில், ''அரசு பள்ளி மாணவர்கள், திறமைகள் இருந்தும் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழித்திறன் இல்லாமல் நல்ல வேலைவாய்ப்பை இழக்கின்றனர். தற்போது முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டுள்ளது. அதே போல், தொழில்நுட்ப அறிவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தொடக்க பள்ளி முதலே, மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பாடப்பிரிவை உருவாக்கவேண்டும்,'' என்றார்.

மாயமான மலேசிய விமானத்தின் உதிரிபாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு: இந்தோனேஷிய விமானப்படை தளபதி தகவல்

சிங்கப்பூர்,

மாயமான மலேசிய விமானத்தின் உதிரிபாகங்கள் பெலிதுங் தீவு அருகே நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேஷிய விமானப்படை தளபதி தெரிவித்தார்.


காணாமல் போனது

155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் ஒன்று சிங்கப்பூர் நகருக்கு நேற்று முன்தினம் காலை 5.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தை சென்று தரையிறங்கி இருக்கவேண்டும்.

ஆனால், சுரபவா நகரில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது 6.24 மணிக்கு விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் முற்றிலுமாக இழந்தது. இதைத் தொடர்ந்து விமானம் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அனுமதி அளிக்கப்படவில்லை

ஜாவா கடல் பகுதியில் 32 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடர்த்தியான மேகங்கள் காரணமாக விமானத்தை 38 ஆயிரம் அடி உயரத்தில் அனுமதிக்கும்படி விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்.

ஆனால், அந்த பகுதியில் எந்த நேரமும் தொடர்ந்து விமானங்கள் பறந்தவாறே இருக்கும் என்பதால் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தொடர்பு துண்டிப்பு

இந்த நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது.

இந்த தகவலை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார்.

விமானம் பெலிதுங் தீவு பகுதியில் தென்கிழக்கு தன்ஜூங் பாண்டன் பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்த வரை அதன் நிலை தெரிந்து உள்ளது. அதன்பிறகுதான் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இடி தாக்கியதா?

விமானம் சென்ற பகுதியில் அடிக்கடி இடி, மின்னல் தாக்கும் பகுதி என்பதால் விமானத்தை இடி தாக்கி இருக்கலாம் என்றும் இதனால் அது நொறுங்கி கடலில் விழுந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

எனவே, நொறுங்கி விழுந்த விமானத்தின் உதிரி பாகங்கள் ஆழ்கடலுக்கு உள்ளாக சென்று இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் விமானிகளும், வான்வெளி போக்குவரத்து துறை நிபுணர்களும் இடி மின்னல் என்பது விமான வழிப்பாதையில் சாதாரணமான ஒன்று. மேக அடுக்குகளின் சற்று மேலாக பறந்தாலே இதைத் தவிர்த்து விட முடியும். ரேடார் தொடர்பையும் பெற இயலும் என்கின்றனர்.

தீவிர தேடுதல் வேட்டை

இதனிடையே மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தோனேஷியாவின் விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்த படைகளுடன் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஊழியர்களும் இணைந்துள்ளனர்.

இந்தோனேஷிய ராணுவத்தின் தேடுதல் மற்றும் மீட்பு படையினர் கிழக்கு பெலிதுங்கின் மாங்கர் பகுதி மீனவர்களிடம் மாயமாய் மறைந்த விமானம் பற்றி எடுத்துக் கூறி தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் உதிரிபாகங்கள் நடுக்கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதை இந்தோனேஷியா உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேஷிய விமானப்படை செய்தி தொடர்பாளர் தஹ்னான்டோ கூறியதாவது:-

விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோனேஷிய ஹெலிகாப்டர் ஒன்று விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களையும், 2 இடங்களில் விமானத்தின் எண்ணை படலங்கள் மிதப்பதையும் ஜாவா தென் கிழக்கு கடலில் உள்ள பெலிதுங் தீவு பகுதியில் கண்டுபிடித்து இருக்கிறது.

இது விமானம் கடைசியாக தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை. அந்த பகுதியில் காணப்படும் எண்ணை படலங்கள் சேகரிக்கப்பட்டு அது மாயமான விமானத்தில் இருந்த பெட்ரோல்தானா? என்பது ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவும் உறுதி

ஜகார்த்தா விமானப் படை தளத்தின் தளபதி டி புத்ரான்டோ கூறும்போது, ‘‘மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஓரியான் போர் விமானம் நங்கா தீவு அருகே சந்தேகத்துக்கு இடமான சில பொருட்களைக் கண்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

நங்கா தீவு, விமானம் மாயமான இடத்தில் இருந்து 1,120 கி.மீ. தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Upper Primary CRC!

Primary CRC 03.01.2015

Sunday, 28 December 2014

தழிழ்நாடு வனத்துறையில் 181 காலிப்பணியிடங்கள்

சென்னை: தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தழிழ்நாடு வனத்துறையில் 181 காலிப்பணியிடங்கள் துறை: தமிழ்நாடு வனத்துறை பணியின் பெயர்: வனக் காப்பாளர் காலியிடங்கள்: 148 துறை: தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம் பணியின் பெயர்: வனக் காப்பாளர் காலியிடங்கள்: 17 சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,400 துறை: அரசு ரப்பர் கழகம் பணியின் பெயர்: கள உதவியாளர் காலியிடங்கள்: 16 சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200 கல்வித் தகுதி: விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்யூட்டர் சயின்ஸ், , சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கும் தேதி: 02.01.2015 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2015 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.02.205 எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 60 தேர்வுக் கட்டணம்: ரூபாய் 262 மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும். இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.

பள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: தமிழக கல்வித்துறை தொடங்குகிறது

இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல் களஞ்சியம் தொடங்குவதென பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்குத் தேவையான தகவல்கள் தொகுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக்காக இணையதளங்களை நாடுவது
அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல தகவல்கள்
தமிழில் கிடைப் பதில்லை. மேலும், பாடத்திட்டத் துக்கு தேவையான தகவல்கள் அனைத் தையும் அவை உள்ளடக்கியிருப்ப தில்லை. இந்த நிலையை உணர்ந்த பள்ளி கல்வித்துறை பள்ளி மாணவர் களுக்கான இணைய அறிவுக் களஞ் சியத்தைக் கட்டமைத்து வருகிறது. உதாரணமாக, அறிவியலில் புவியீர்ப்பு விசை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால், புவியீர்ப்பு விசை என்று பதிவிட்டால், அது குறித்த கட்டுரைகள், வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் என எல்லா தகவல்களையும் இந்த இணையத்தில் பெறலாம். இதன் மூலம் ஒரு மாணவர் ஒரு விஷயத்தை முழுமையாகவும் எளிதிலும் புரிந்துகொள்ள முடியும். இது குறித்து இத்திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவ ரான அசிர் ஜூலியஸ் கூறும்போது, “இந்த தகவல் களஞ் சியத்துக்கு தேவையான தகவல்களை திரட்டி பதிவிட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் இந்த பணியில் ஈடுபடுவது அவர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இணையத்தில் ஒரு தகவலைப் பதிவிடும்போது அது யாரால் பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படும். இது ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும்” என்றார். முதல் கட்டமாக அறிவியல் சம்பந் தப்பட்ட வீடியோக்களை திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. 32 மாவட்டங்களிலிருந்தும் ஒரு மாவட் டத்துக்கு 3 அறிவியல் வீடியோக்கள் தயார் செய்து தர கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது. தகவல்களை திரட்டித் தரும் குழுவில் இருக்கும் ஆசிரியர் என்.அன்பழகன் கூறும்போது, “என் வகுப்பில் பாடம் நடத்தும்போதே அதை செயல்வடிவில் மாணவர்களை செய்யச் சொல்லி அதை வீடியோ எடுக்கிறேன். இதனால், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்” என்றார். ஏற்கெனவே தேசிய அளவில் மத்திய அரசு www.nroer.gov.in என்ற தகவல் களஞ்சியத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் பள்ளி கல்வித்துறை மூலம் ஒரு தகவல் களஞ்சியம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து மேம்படுத்த அவ்வப் போது நடக்கும் அறிவியல் நிகழ்வுகள், முன்னேற் றங்கள், புதிய பாடங்கள் சேர்க்கப்படும். இதனை இணைய வசதி கொண்ட எந்த மாணவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

 பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள், கடந்த ஆண்டுகளி
ல் விடுப்பட்ட பள்ளிகள், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை, 'பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில்' பதிவு செய்யும் பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் சுய விபரம், பெற்றோரது போன் எண், எடை, உயரம் அனைத்தும் பள்ளிகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில், மாணவர்களின் ஆதார் எண் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான மாணவர்களிடமே, ஆதார் அடையாள அட்டை உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆதார் உள்ள மாணவர்கள், ஆதார் இல்லாத மாணவர்கள் என்ற பிரிக்கப்பட்டு. ஆதார் இல்லாத மாணவர்களின் விபரம், மின்னஞ்சல் மூலம் உடனடியாக அனுப்பப்படவுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று, மண்டல அளவில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி, ஆதார் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில், 90 சதவீத விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் விபரங்கள் அனைத்து பள்ளிகளிலும், சேகரிக்கப்பட்டு, தொகுப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், மண்டல ஆதார் வினியோக சிறப்பு முகாம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை-தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் 10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. 100க்கு 100 தேர்ச்சி பல பள்ளிகளிலும் எடுத்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் அதிக தேர்ச்சி பெறுகின்றன.
ஆனால் இன்னமும் சில மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம், பின்தங்கிய நிலைமைதான் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ச்சி சதவீதத்தில் சராசரியில் பின்தங்கியுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும். சராசரி தேர்ச்சி சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தனியே கூட்டம் நடத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டு தொடக்கம் முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் தனி பயிற்சி அளித்து வந்தால் படிப்படியாக பெரும்பாலான மாணவர்களும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவர். அரையாண்டு தேர்வு தர அட்டை வழங்கிய பிறகும் சில மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களையும் இனங்கண்டு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நெட்' தகுதி தேர்வுஏராளமானோர் பங்கேற்பு

சென்னை:உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவிலான, தகுதித் தேர்வை நெட், தமிழகத்தில், நேற்று, ஏராளமானோர் எழுதினர்.
பல்கலை மானியக் குழு யு.ஜி.சி., சார்பில், கல்லுாரி உதவி
பேராசிரியர்களுக்கான, தேசிய அளவினான, தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் வெற்றி பெறும், முதல் ஐந்து சதவீதத்தினருக்கு, ஜே.ஆர்.எப்., எனப்படும், இளநிலை ஆய்வாளருக்கான வாய்ப்பும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ந்தாண்டு முதல், தேர்வை நடத்தும் பொறுப்பை, மத்திய இடைநிலை கல்வி கழகம் சி.பி.எஸ்.இ., யிடம், யு.ஜி.சி., வழங்கியது.விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்தை பெற்று, அவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'டையும், சி.பி.எஸ்.இ., வழங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 105 மேற்பட்ட தேர்வு மையங்களில், இந்த தேர்வு நேற்று நடந்தது. சென்னையில், 12 மையங்களில், ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினர். காலை, முதல் இரண்டு தாள்களும், பிற்பகல் மூன்றாம் தாள் தேர்வும் நடந்தது.தமிழகத்தில் நேற்று பஸ்கள் இயக்கப்படாததால், பல மையங்களில், தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு: அரசு அதிகாரிகளுக்கு புது கிடுக்கிப்பிடி

புதுடில்லி: மத்திய அரசின், 26 லட்சம் அதிகாரிகள், தங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு, வெளிநாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீடு போன்ற தகவல்களை, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'லோக்பால் சட்டப்படி, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும்
அதிகாரிகளின் மனைவி, வாரிசுகளின் வெளிநாட்டு முதலீடு, வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கான படிவங்கள், தனியாக வழங்கப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, சொத்து, முதலீடு, சேமிப்பு விவரங்களை தெரிவிக்க, மத்திய அரசு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வெளிநாட்டு கணக்கு, முதலீடு விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.'சொத்து விவரங்களை வெளியிடுவதால், அது குறித்த தகவல்கள் பிறருக்கு தெரிய வாய்ப்பு உள்ளது' என, அச்சம் தெரிவித்துள்ள அதிகாரிகள், அந்த தகவல்கள் எந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

திருவனந்தபுரம்:கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.


கேரளாவில், காங்கிரசை சேர்ந்த, உம்மன் சாண்டி முதல்வராக உள்ளார். பள்ளிப் பாடங்களை, டி.சி.டி., எனப்படும், 'டிஜிட்டல் கொலாபொரேடிவ் டெக்ஸ்ட்புக்' என்ற முறையில், அறிமுகம் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாட திட்டத்தின் படி, ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடங்கள், டிஜிட்டல் பைல்களாக மாற்றப்பட்டு, அதனுடன் பிற ஒளி, ஒலி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளுமாறு செய்யப்படும்.

'டேப்ளட்' எனப்படும், சிறிய அளவிலான கம்ப்யூட்டர், 'இ-ரீடர்' எனப்படும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களில் தொகுப்பு கருவி போன்றவற்றை பயன்படுத்தி, மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்.அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய கல்வித் திட்டத்திற்காக, டேப்ளட் பிசி, இ-ரீடர் போன்றவை ஏராளமாக வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, இந்த திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய திட்டத்தின் கீழ், 37 லட்சம் மாணவர்களுக்கும், இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும்: சிஐடியு அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தொடங்குவதாக இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, இன்றே பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். பணிமனை வாயில்களில் பேருந்துகளை இயக்காமல் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும்: சிஐடியு அறிவிப்பு இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விரைந்து அரசு நடவடிக்கை எடுத்து போராட்டத்தை வாபஸ் பெற செய்ய வேண்டும் என கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் சென்னையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆலோசனை நடத்தின. அதன் முடிவில் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தொழிற்சங்கத்துடன் அரசு உடனடியாக பேச்சு நடத்த முன்வரவேண்டும் எனவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சிஐடியு சவுந்தரராஜன் கூறுகையில், ‘இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழக அரசே காரணம். தமிழகம் முழுவதும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. வழக்கு நிலுவையை காரணம் காட்டி அரசு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கிறது. வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது

வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனுதாரருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மனுதாரரின் வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக ஆஜராவார்கள்.

துவங்கியது போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக்

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்ட டிசம்பர் 29ம் தேதிக்கு பதிலாக இன்றே (டிசம்பர் 28) போராட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தொ.மு.ச., தெரிவித்துள்ளது.

தொ.மு.ச., குற்றச்சாட்டு : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பலருக்கு 2012ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியமும், ஓய்வு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. மேலும் போக்குவரத்து துறை ஊழியர்களின் நலனில் தமிழக அரசு அக்கறை கொள்ளவில்லை என தொ.மு.ச., குற்றம்சாட்டி உள்ளது. மேலும், 12வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், 20 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.
பேச்சுவார்த்தை தோல்வி : தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தொ.மு.ச., கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, சென்னையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படாததால், ஏற்கனவே அறிவித்துள்ள டிசம்பர் 29ம் தேதிக்கு முன்னதாகவே வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து கழக ஊழியர்கள் துவக்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக, தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1.40 லட்சம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம் : ஸ்டிரைக் நடைபெறும் என தொ.மு.ச., திட்டவட்டமாக அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட மற்றும் கிளை போக்குவரத்து கழக பணிமனைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டிரைக்கை மீறி பஸ்கள் இயக்கப்பட்டதை கண்டித்து மணப்பாறையில் இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள், போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் பயணிகள் உரிய நேரத்திற்கு போக வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அரசு அறிவிப்பு : தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Saturday, 27 December 2014

பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.
 
              சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும் என கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சில பள்ளிகளில் 5 முதல் 10 வரையிலான 'லேப்டாப்' திருடு போயுள்ளதால், அதற்கு ஈடான பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
                  தமிழ்நாடு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜபாண்டியன் கூறியதாவது:- பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லை. பள்ளிக்கு வந்த 'லேப்டாப்'பை மாணவர்களுக்கு வழங்க காலம் தாழ்த்துவதால் பாதுகாக்க முடியாது. தலைமையாசிரியர்கள் பணம் செலுத்தாவிட்டால் எந்த வித பயனும் கிடைக்காது என மிரட்டுகின்றனர். இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் புகார் தெரிவிக்க உள்ளோம்,'' என்றார்

இருப்பிடம், ஜாதி, வருவாய் உட்பட 5 சான்றிதழ்: கூட்டுறவு சங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு

ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க உள்ளது. இதன் மூலம் வருவாய் துறை அலுவலகத்தில் சான்றிதழுக்காக கிராமப்புற மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

அரசு முடிவு:

மாநிலம் முழுவதும், பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து, ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுகின்றனர். தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் உடனடியாக கிடைப்பதில்லை என்பதால், கிராம மக்கள் பல நாள் நடையாய், நடக்கின்றனர் அல்லது புரோக்கர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். இதை தடுக்க, கிராமபுறங்களிலுள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் முதல்கட்டமாக ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் ஆகிய, ஐந்து சான்றிதழ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 4,200 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. ஐந்து சான்றிதழ்களையும் பெற்று தருவதற்காக, கடந்த சில நாட்களாக, சேலம் மாவட்ட கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர் ஒருவர் கூறியதாவது:

கம்ப்யூட்டர் மூலம்...:

கிராமங்களில் ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் பெற விரும்பும் மக்கள், அருகிலுள்ள அதற்கான ஆவணத்துடன் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஆன் - லைன் மூலம், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,வுக்கு அனுப்பி வைக்கப்படும். மனுக்கள் மீது வி.ஏ.ஓ.,க்கள் விசாரணை நடத்தி, அதிகாரிகள் கையெழுத்திட்ட சான்றிதழ் ஆன் - லைன் மூலமாகவே, குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மனுதாரர், கூட்டுறவு சங்கத்தில் சென்று சான்றிதழை பெற்று கொள்ளலாம். முதல்கட்டமாக, சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில், கூட்டுறவு சங்கம் மூலம் சான்றிதழ் பெற்று தரும் பணி துவங்கியுள்ளது. இதற்காக மனுதாரர், 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், 6 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்தப்படும். மீதி தொகையை சேவை செய்து தரும் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்படும். இதில், அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மூலமே மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

       இதன் பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி வேலுசாமி திருச்சியில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அவரது மனைவி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். இதையடுத்து, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வேலுசாமி மீது அவரது மனைவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி வேலுசாமியை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது. பிறகு, 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி அந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பணியில் அமர்த்தியது.
ஆனால், 2014-15-ஆம் ஆண்டு பதவி உயர்வுப் பட்டியலில் வேலுசாமி பெயர் இடம்பெறவில்லை. மேலும், மீண்டும் பணியில் சேர்ந்தது முதல் ஊக்க ஊதியமும் வழங்கவில்லை.
இது குறித்து மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தனது பெயரை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கவும், ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வேலுசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. அதைக் காரணமாக்கி மனுதாரரின் பதவி உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.
இருதார மணம் செய்துள்ளார் என்ற புகாரை மனுதாரருக்கு எதிராகக் கொண்டுவர முடியாது. இவருக்கும் மனைவிக்கும் இடையேயான குடும்பத் தகராறை முகாந்திரமாகக் கொண்டு பதவி உயர்வை மறுக்க முடியாது. மனுதாரர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் ஊக்க ஊதியம் பெற உரிமை உண்டு. ஆனால், ஏன் ஊக்க ஊதியம் வழங்கவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தண்டனை அளித்திருந்தால் மட்டுமே மறுக்க முடியும்.
எனவே, மனுதாரருக்கு 8 வாரங்களுக்குள் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அவரது பதவி உயர்வு குறித்த மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

TRB : ASST. PROF IN GOVT. COLLEGES - PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW

Teachers Recruitment Board
College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW

திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்தஆர். கிர்லோஷ் குமார் நகர் மற்றும்ஊர்
அமைப்பு திட்டத் துறைஇயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


திருச்சிமாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன்கூட்டுறவு துறை பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியராக இருந்தபழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல்மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடாச்சலம் தேனிமாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, விருதுநகர் மாவட்டஆட்சியராக இருந்த ஹரிஹரன் திண்டுக்கல்ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தராஜாராமன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியராக இருந்த முனுசாமி சிவகங்கைமாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக எஸ்பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

Friday, 26 December 2014

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

          2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக அரசு தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் தாங்கள் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை 2015-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும்.

"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்'

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

             ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே, தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிகிறது.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதுடன், உடனடியாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

            இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

         மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் விவரங்களில் பிழைகளை நீக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்படும். அதன்பிறகு, விடைத்தாள் முகப்புச் சீட்டு அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முகப்புச் சீட்டில் மாணவர்களின் பதிவு எண், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களும், முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் ரகசிய பார்கோடு எண்ணும் அச்சிடப்படும். விடைத்தாள் முகப்புச் சீட்டில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து மாணவர்கள் கையெழுத்திட்டால் மட்டும் போதும்.

முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் "டம்மி' எண்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்படும் ரகசிய பார்கோடு எண் முறை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையின் மூலம் முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களை வேறு மாவட்டங்களில் மதிப்பீடு செய்வது, விடைத்தாளுக்குரிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, ரகசியத்தன்மையைப் பாதுகாப்பது போன்ற பணிகள் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிமைப்படுத்தப்பட்டன. அதனால், தவறுகளும் வெகுவாக குறைந்தன.

மொழிப்பாடங்களுக்கு பக்கங்கள் குறைப்பு: பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 40-லிருந்து 32 ஆகவும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 30-லிருந்து 22 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொழிப்பாடத் தேர்வுகளில் கடந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள் அதிகப் பக்கங்களைப் பயன்படுத்தவில்லை. இதனையடுத்து, பக்கங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC GROUP 4 OFFICIAL KEY

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
(Date of Examination:21.12.2014)
 
         1
         2
         2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 30th December 2014 will receive no attention.

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில்
இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார்.

தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில், “நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன் தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு ஓடினான்,” என்றார்.

பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

பொங்கல் முன்பணம்:ஆசிரியர்கள் கோரிக்கை

திருப்பூர் :அதிக தொகை ஒதுக்கி, அனைவருக்கும் பொங்கல் முன்பணம் வழங்க வேண்டும், என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் மணிகண்டபிரபு அறிக்கை:
திருப்பூர் வடக்கு பகுதியில், 92 பள்ளிகளில் 587 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; ஒரு பிரிவு ஆசிரியர்கள் கல்வித்துறை கட்டுப்பாட்டிலும், ஒரு தரப்பு ஆசிரியர்கள் எஸ்.எஸ்.ஏ., திட்டத்திலும் உள்ளனர். பண்டிகை காலங்களில், ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கி, மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.
கடந்தாண்டு தீபாவளிக்கு, எஸ்.எஸ்.ஏ., சார்பில் பணியாற்றும் 271 ஆசிரியர்களில் 50 பேருக்கு மட்டுமே முன்பணம் ஒதுக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால், அனைவருக்கும் வழங்கும் வகையில் எஸ்.எஸ்.ஏ., பிரிவுக்கு அதிக தொகை ஒதுக்க வேண்டும். கடந்த முறை விண்ணப்பித்து, முன்பணம் பெறாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Cell Phone Doubts: SAR அளவு குறித்து அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!


சார் (SAR)
           Specific Absorption Rate எனப்படும் மேற்கண்ட அளவானது மனித உடலால் (உடலின் பாகங்களால்) உட்கிரகிக்கப்படும் கதிரியக்கத்தின் அளவினைக் குறிக்கும். செல்போன்கள் நம் கண்களுக்கு புலப்படாத ரேடியா அலைகளால் நம் பேச்சு மற்றும் தகவல்களை பெறுகிறது என முன்னரே பார்த்தோம். 
          இவ்வாறு அவை ரேடியோ கதிர்களை அனுப்பியும் பெற்றும் வரும் போது போனின் உள்ளே மட்டுமின்றி போனின் அருகாமையிலும் கதிரியக்கத்தின் (ரேடியேஷன்) வெளிப்பாடு இருக்கும். செல்போன் என்பது நம் மூன்றாவது கையாகிவிட்ட இக்காலங்களில் அவற்றின் அருகாமை கதிரியக்கத்தின் தாக்கம் தொடர்ந்து நம் உடலில் பாய்ந்து கொண்டிருக்கும். இதனால் புற்றுநோய் எனப்படும் கேன்சர் உருவாக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
              ஆனால் மேற்கண்ட கதிரியக்கமே வெளியாகமல் போன்களை இயக்க முடியாது. எனவே வாகனை புகைப் பரிசோதனை அளவைப் போன்று நம் அரசாங்கள் குறிப்பிட்ட எல்லைகளை அமைத்துள்ளன. போனில் பயன்படுத்தப்படும் கதிரியக்க டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் ரிசீவர்களின் தரத்தின் அடிப்படையில் இம்மதிப்பானது அமையும். விலையு உயர்ந்த டிரான்ஸ-ரிசீவர்கள் குறைந்த கதரியக்கத்துடன் அதிக துல்லயத்தை தரும். விலை குறைந்தவை மிக அதிக கதிரியக்கதை்தை வெளியிடும்.
              நம் இந்திய அரசானது 2012ஆண்டிற்கு பிறது தயாரிக்கப்படும் போன்களில் அதிகபட்ச எல்லையை பரசோதித்த பின்னரே போன்கள் சந்தைப்படுத்தப்படும். செல்போன் ஜாம்பவான்களான நோக்கிய மற்றும் சேம்சங் நிறுவனங்கள் பாதுகாப்பு எல்லைக்குள் தங்கள் போன்களின் சார் அளவுகளை வைத்துள்ளன. செல்போன்களை முதல் முதலில் கண்டறிந்த மோட்டோரோலா நிறுவன போன்களின் சார் மதிப்புகளே இன்றும் முதல் பத்து இடங்களில் அமைகின்றன.
             ஒத்த விலையுடைய போன்களை ஒப்பிடும் போது மோட்டோ-ஈ போனின் சார் மதிப்பானது தலைப்பகுதியில் 1.5W/k.g என்றும் உடல் பகுதியில் 1.36W/k.g என்றும் அளவிடப்பட்டுள்ளன. சேம்சங் நிறுவனத்தின் எஸ் டியோஸ் 2 போனானது தலை பகுதியில் 1.02W/k.g என்ற அளவிலும், நோக்கியா  லூமியா 520 ஆனது தலையில் 1.09W/k.g என்ற அளவிலும், உடலில் 0.97W/k.g என்ற அளவிலும் கதிரியக்கத்தை வெளிவிடுகிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்திய வெளியீடான மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 ஆனது தலையில் 0.45W/k.g மற்றும் உடலில் 0.85W/k.g என்ற மிகக் குறைந்த அளவுகளில் கதிரியக்கத்தை வெளியிடுகிறது.
          மேற்கண்ட மதிப்புகளானது இரண்டு நிலைகளில் அளிவிடப்படும். இதில் at Head மதிப்பானது போனானது காதில் வைத்து பேசப்படும் போது வெளியிடும் கதிரியக்கத்தின் அளவாகும். at Body மதிப்பானது ஸ்டாண்ட் பை எனப்படும், பயன்படுத்தப்படாமல் இருக்கும் அமைதி நிலையை குறிக்கும். (இந்நிலையிலும் போன் தொடர்ந்து கதிரியக்கத்தை அனுப்பிக் கொண்டும், பெற்றுக் கொண்டும் இருந்தால்தான், உங்கள் நண்பர் உங்கள் எண்ணை டயல் செய்யும்போது உங்கள் போன் ரிங்காகும்).
              இதில் W/k.g என்பது ஒரு கிலோ எடை கொண்ட உடற்பகுதியில் உள்ளே செல்லும் கதிரியக்கத்தின் (மின்னாற்றலின்) அளவாகும். இது வாட்ஸ் என்ற அளவில் அளக்கப்படும். நம் நாடானது அதிகபட்சமாக 1.6W/k.g அளவு கதிரியக்க எல்லை கொண்ட போன்களை மட்டுமே அனுமதிக்கும். குறைந்தபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம்.