This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 1 December 2014

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதைவிடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும்என, பள்ளிக் கல்வித் துறைஉயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


          தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும்மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தபல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தில் குறிப்பிட்டமாற்றங்கள் ஏற்படவில்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம்உள்ளன. சில மாதங்களுக்கு முன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோர், மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தைநடத்தி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 80 சதவீத ஆசிரியர்கள் கல்விபோதிப்பதில் முழு ஈடுபாடு காட்டுவதில்லை. மாணவர்களை குறைகூறி தங்களது கடமையிலிருந்து தவறிவருவதாகவும், இதன் தாக்கம் 10ஆம்வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் கடுமையாக எதிரொலிப்பதாகவும் தெரியவந்தது. மேலும், பாடங்களை மனனம்செய்வதால், மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும்போதுதடுமாறுவதாகவும், கல்வித் துறை அதிகாரிகள்ஆய்வில் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், கல்வித் துறை இணைஇயக்குநர்கள், கல்வித் துறை உயர்அதிகாரிகள்கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாணவ, மாணவியர்களுக்கு 6, 7, 8ஆம் வகுப்புகளில்இருந்தே கல்வி கற்பிப்பதில் ஊக்குவிப்புநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்றபாடங்களில் முழு ஈடுபாட்டுடன், அறிவுப்பூர்வமாககற்கச் செய்துவிட்டால், உயர் கல்வியில் மாணவர்களின்தடுமாற்றங்களை அறவே தடுக்க முடியும். மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்விகற்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களைச்சார்ந்தது. மாவட்டந்தோறும் 10ஆம் வகுப்பு, பிளஸ்2 அரசு பொதுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த, 6, 7, 8ஆம் வகுப்புகளிலேயே போதியபயிற்சிகளை வழங்கி, முன்னேற்பாடுகளை செய்யவேண்டும். இதற்கு, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளை, அரசு பள்ளிக் கல்வித் துறைஉயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக, கல்வித் துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா,
கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநில வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகின்றனர். இதையடுத்து தில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநில வங்கி ஊழியர்கள் வரும் 3ம் தேதியும், மேற்கு வங்கம், ஒடிஷா, பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநில வங்கி ஊழியர்கள் 4ம் தேதியும், குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநில ஊழியர்கள் 5ம் தேதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 34

பொதுத் தமிழ்
1019. ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர் .........
1020. களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது?
1021. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் .............

1022. தமிழின் முதல் காப்பியம்
1023. ‘புஷ்பவல்லி' என்னும் நாடகத்தினை இயற்றியவர் .......
1024. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
1025. ‘அரிசி விலையை யடிக்கடி குறைத்திட்ட பாவி அவதிப்படுவது போல்' - இவ்வுவமை காணப்படும் இலக்கியம்?
1026. ‘நெடுந்தொகை' என்றழைக்கப்படும் நூல் .......... 1027. ‘வெண்சீர்' எனப்படுவது ........
1028. வேர்ச்சொல் அறிக: பாடினான்
1029. யுனெஸ்கோ அமைப்பு தாரசுரம் கோயிலை எதனுடைய சின்னமாக அறிவித்துள்ளது? 1030. ‘அன்று வேறு கிழமை' என்ற கவிதையின் ஆசிரியர்
1031. "மந்திரங்கள் ஓதியது அந்தக் காலம் எந்திரத்தால் மழை வருவது இந்தக் காலம்'' - இவை யாருடைய பாடல் வரிகள்?
1032. "வரைவு' என்பது
1033. திருநாவுக்கரசரை அப்பரே என்று முதன்முதலில் விளித்தவர் யார்?
1034. "மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்'' - பாடலடி இடம் பெற்ற நூல்.
1035. அகத்தூது என்பது
1036. ""எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ'' என்று பாடியவர்
1037. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுத காரணமாயிருந்தவர்
1038. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
1039. ‘சூரியநாராயண சாஸ்திரிகள்' என்பது யாருடைய இயற்பெயர்?
1040. மரங்களின் பெயரை தங்கள் ஊர் பெயராக வழங்கி வரும் மக்கள்
1041. வள்ளலாரின் இயற்பெயர்
1042. "திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது'' எவ்வகை வாக்கியம்?
1043. இயற்சீர் நான்கோடு நேர் நேர் சேர்த்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1044. உலகில் முதன் முதலில் மக்கள் தோன்றியதாகக் கருதப்படும் இடம் ...................................
1045. தமிழர்களை முதலில் தோன்றிய மூத்த குடி என்று குறிப்பிடும் நூல் ..................................
1046. தமிழில் கிடைக்கும் நூல்களுள் தொன்மையானது ........................
1047. ‘கடவுளும் கந்தசாமியும்’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
1048. மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன? 1049. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது?
1050. அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது ...............................
1051. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல்?
1052. ‘நெஞ்சாற்றுப்படை’ எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது?
1053. ‘சூளாமணி’ நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது?
1054. ‘மக்கள்’ என்பது ஒரு ...............................
1055. ‘களவழி நாற்பது’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?
1056. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது ...............................
1057. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி?
1058. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் ........................
விடைகள்
1019. திருநாவுக்கரசர் 1019. திருநாவுக்கரசர் 1019. திருநாவுக்கரசர் 1020. கழுமலம் 1020. கழுமலம் 1020. கழுமலம் 1021. நல்லந்துவனார் 1021. நல்லந்துவனார் 1021. நல்லந்துவனார் 1022. சிலப்பதிகாரம் 1022. சிலப்பதிகாரம் 1022. சிலப்பதிகாரம் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1024. கால்டுவெல் 1024. கால்டுவெல் 1024. கால்டுவெல் 1025. தேம்பாவணி 1025. தேம்பாவணி 1025. தேம்பாவணி 1026. அகநானூறு 1026. அகநானூறு 1026. அகநானூறு 1027. வசைச்சீர் 1027. வசைச்சீர் 1027. வசைச்சீர் 1028. பாடு 1028. பாடு 1028. பாடு 1029. மரபு அடையாளச் சின்னம் 1029. மரபு அடையாளச் சின்னம் 1029. மரபு அடையாளச் சின்னம் 1030. ஞானக்கூத்தன் 1030. ஞானக்கூத்தன் 1030. ஞானக்கூத்தன் 1031. உடுமலை நாராயணக் கவி 1031. உடுமலை நாராயணக் கவி 1031. உடுமலை நாராயணக் கவி 1032. திருமணம் 1032. திருமணம் 1032. திருமணம் 1033. திருஞானசம்பந்தர் 1033. திருஞானசம்பந்தர் 1033. திருஞானசம்பந்தர் 1034. சீறாப்புராணம் 1034. சீறாப்புராணம் 1034. சீறாப்புராணம் 1035. சிற்றிலக்கியம் 1035. சிற்றிலக்கியம் 1035. சிற்றிலக்கியம் 1036. ஆண்டாள் 1036. ஆண்டாள் 1036. ஆண்டாள் 1037. சீத்தலைச் சாத்தனார் 1037. சீத்தலைச் சாத்தனார் 1037. சீத்தலைச் சாத்தனார் 1038. மறைமலையடிகள் 1038. மறைமலையடிகள் 1038. மறைமலையடிகள் 1039. பரிதிமாற்கலைஞர் 1039. பரிதிமாற்கலைஞர் 1039. பரிதிமாற்கலைஞர் 1040. முல்லை நில மக்கள் 1040. முல்லை நில மக்கள் 1040. முல்லை நில மக்கள் 1041. இராமலிங்க அடிகளார் 1041. இராமலிங்க அடிகளார் 1041. இராமலிங்க அடிகளார் 1042. செயப்பாட்டுவினை 1042. செயப்பாட்டுவினை 1042. செயப்பாட்டுவினை 1043. தண்பூ 1043. தண்பூ 1043. தண்பூ 1044. லெமூரியா 1044. லெமூரியா 1044. லெமூரியா 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1046. தொல்காப்பியம் 1046. தொல்காப்பியம் 1046. தொல்காப்பியம் 1047. புதுமைப்பித்தன் 1047. புதுமைப்பித்தன் 1047. புதுமைப்பித்தன் 1048. சுவாமிவேதாசலம் 1048. சுவாமிவேதாசலம் 1048. சுவாமிவேதாசலம் 1049. தொல்காப்பியம் அகம் 1049. தொல்காப்பியம் அகம் 1049. தொல்காப்பியம் அகம் 1050. உள்ளுறை உவமம் 1050. உள்ளுறை உவமம் 1050. உள்ளுறை உவமம் 1051. ஐங்குறுநூறு 1051. ஐங்குறுநூறு 1051. ஐங்குறுநூறு 1052. முல்லைப்பாட்டு 1052. முல்லைப்பாட்டு 1052. முல்லைப்பாட்டு 1053. சுருக்கம் 1053. சுருக்கம் 1053. சுருக்கம் 1054. உயர்திணை பன்மை 1054. உயர்திணை பன்மை 1054. உயர்திணை பன்மை 1055. பொய்கையார் 1055. பொய்கையார் 1055. பொய்கையார் 1056. தண்டியலங்காரம் 1056. தண்டியலங்காரம் 1056. தண்டியலங்காரம் 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1058. பரிபாடல் 1058. பரிபாடல் 1058. பரிபாடல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 வினா-விடை 33

பொதுத் தமிழ்
994. வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல்?
995. தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார்?
996. இறைச்சி என்பது எதனின் ஒரு பகுதியைக் குறிப்பது?

997. பிரித்து எழுதுக: வையந்தழைக்கும்
998. பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி எது?
999. அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை?
1000. இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர்
1001. குண்டலகேசி எந்த சமயக் காப்பியம்?
1002. "குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
1003. "நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
1004. கம்பராமாயணத்தின் முதல் பகுதி --------
1005. கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன?
1006. பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது?
1007. ‘தொப்பி' என்பது .................
1008. உவமும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது .............
1009. கலிப்பாவுக்கு உரிய ஓசை .................
1010. பால் தருவது காளையா? பசுவா? - இது என்ன வழு?
1011. போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த வீரனின் உடலை அவன் மனைவி தழுவுதல் என்பது
1012. "மதயானை முகவன்' என்றழைக்கப்படும் இறைவன் .............
1013. இறையனார் அகப்பொருள் உரை "பொருள்கோள்' என்னும் சொல்லிற்குத் தரும் பொருள் யாது?
1014. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?
1015. நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது ?
1016. நற்றிணையைத் தொகுப்பித்தவர்
1017. வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை ................
1018. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் ............
விடைகள்
994. பவுத்தம்
995. நான்கு
996. கருப்பொருள்
997. வையம் + தழைக்கும்
998. பிராகுயி
999. ஏழு
1000. வினைத் தொகை
1001. பவுத்தம்
1002. மாதவையா
1003. சுந்தரம் பிள்ளை
1004. பாலகாண்டம்
1005. பரதன்
1006. வள்ளைப்பாட்டு
1007. இந்துஸ்தானிச் சொல்
1008. உள்ளுறை
1009. துள்ளலோசை
1010. வினா வழு
1011. சிருங்கார நிலை
1012. பிள்ளையார்
1013. ஆரிடமணம்
1014. இளம்பூரணர்
1015. இரண்டு
1016. பன்னாடு தந்த மாறன்வழுதி
1017. புறத்திணை
1018. பூதஞ்சேந்தனார்
பொதுத் தமிழ்
தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக விளங்கிய தொல்காப்பியம், நன்னூல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,
பதினெண்கீழ்கணக்கு நூல்கள், நீதி இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியம், சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், கம்பராமாயணம், தமிழுக்கு தொண்டாற்றிய
அறிஞர்கள், உரையாசிரியர்கள், இக்கால இலக்கியங்களான புதினம், கவிதை, சிறுகதைகள், சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்கள், விருது பெற்ற கவிஞர்கள், தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள் மற்றும் தமிழ் மொழியில்
அறிவியல் சிந்தனைகள் அடங்கிய வினாக்கள் பொதுத் தமிழ் பகுதியில் இடம்பெறுகின்றன. நூறு மதிப்பெண்களைக் கொண்ட இந்த பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
50 சதவீத மதிப்பெண்களை கொண்ட பகுதி என்பதால் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பதில் இப்பகுதிக்கு முக்கிய பங்குண்டு. கடும் போட்டி நிலவும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மொழிப்பகுதி பாடத்தில் நூற்றுக்கு 95 மதிப்பெண் பெறுவது வெற்றியை உறுதிப்படுத்தும். இந்த பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல்களை தவறாமல் வாசித்திருக்க வேண்டும். இங்கு தரப்பட்டுள்ள வினா-விடைகளோடு நின்றுவிடமால், அது தொடர்புடைய தகவல்களையும் திரட்டி குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது.
- ஸ்டாலின்
ஈவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையம், மேற்கு தாம்பரம், சென்னை.

68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை: கல்வியாளர்கள் அதிருப்தி

பத்துக்கும் குறைவான மாணவர்கள்
சேர்க்கை கொண்ட, 68
பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு கல்வியாளர்கள்

அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 36 ஆயிரத்து 505
அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில், மாணவர்கள்
சேர்க்கையை அதிகரிக்க, 14 வகையான
நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி
வருகிறது. மேலும், இடைநிற்றல்
தவிர்க்க கல்வி உதவித்தொகை, ஆங்கில
வழிக்கல்வி, தொழில்நுட்ப வகுப்பு என
பல
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும், மாணவர்கள் சேர்க்கையில்
பெரிதாக மாற்றம் ஏற்படுத்தவில்லை.
பெரும்பாலான அரசு பள்ளிகளில்,
மாணவர்கள்
எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.
இதன் காரணமாகவே,
ஒவ்வொரு ஆண்டும்
உபரி ஆசிரியர்களின் பட்டியல்
அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும்,
மாணவர்களின் எண்ணிக்கை பத்துக்கும்
குறைவாக உள்ள பள்ளிகளின் விபரங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்,
தொடக்ககல்வி அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில், 1,121 பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இதில், 68
பள்ளிகளில் பத்துக்கும் குறைவான
மாணவர்கள்
மட்டுமே படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகளை மூட
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வியாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு கூறுகையில்,
"அரசு பள்ளிகளை மாணவர்கள்
சேர்க்கை குறைவுக்கு காரணம்,
பள்ளிக் கல்வித்துறையே.
பல்வேறு காரணங்கள்
கூறி அரசு பள்ளிகளை மூடுதல்,
ஒருங்கிணைத்தல் ஏற்புடையதல்ல.
மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க
ஆக்கப்பூர்வமான
செயல்பாடுகளை மேற்கொள்ள
வேண்டுமே தவிர, பள்ளிகளை மூட
அனுமதிக்கக்கூடாது.
இந்நிலை தொடரும் பட்சத்தில், வரும்
காலங்களில் அரசு பள்ளிகளே இல்லாத
நிலை ஏற்படும்" என்றார்.
இதுகுறித்து கோவை மாவட்ட தொடக்க
கல்வி அலுவலரை பலமுறை
அணுகியும் தகவல் தெரிவிக்க
மறுத்து விட்டார்.

CRC Trainings

அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில்
குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.