This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 1 July 2014

அரசு வேலைக்காக பதிவு செய்தோர் 84.38 லட்சம்: தமிழக அரசு தகவல்

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் மட்டும் 43 லட்சத்து 12 ஆயிரம் பேர்.

கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது. பட்டப் படிப்பு வாரியாக பெயர்களைப் பதிவு செய்துள்ள விவரங்கள் தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் முதல் ஆசிரியர் பட்டப் படிப்பு படித்தவர் வரை மட்டும் 77 லட்சம் பேர் இருக்கின்றனர். அதிலேயே கலை, அறிவியல், வணிகம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆவர்.

அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் நிரப்பப்படுகின்றன. அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்கள் குறித்த பட்டியல் பெறப்பட்டு அவை பூர்த்தி செய்யப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிகாரிகள் நிலையிலான பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமே மட்டுமே நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும்’

மதுரை, ஜூலை.2-மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கைதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று கடந்த 5.1.1994 அன்று ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட கோர்ட்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல் கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இருந்த போதிலும், அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து விட்டு மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்றும் உத்தரவிடக்கோரி வக்கீல்கள் ரத்தினம், சோலைசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தமிழ் ஆட்சி மொழிஇந்த மனுக்கள் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் 1956-ம் ஆண்டு ஆட்சி மொழி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. சட்டத்திருத்தம்ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து 1976-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட கோர்ட்டுகளில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்த திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வக்கீல் ரெங்கா என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்பு, தமிழை தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் தங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ரத்துஅதன் அடிப்படையில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின் படி ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேர்ச்சி பெற வேண்டும்தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார் நிலை பணியாளர் பொது விதிகள்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழி தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழை தாய்மொழியாக கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், “மாவட்ட கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும்” என்பது குறிப்பிடத்தக்கது.  

மத்திய அரசில் பல்வேறு பணி: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 Agricultural Engineer,
Senior Marketing Officer, Deputy Director, Associate Pharmaceutical Chemist, Investigator, Sub-Regional Employment Officer/Officer On Special Duty, Deputy Mineral Economist, Assistant Executive Engineer, Doctor

போன்ற பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: UPSC

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

காலியிடங்கள் விவரம்:
1. Agricultural Engineer - 01
2. Senior Marketing Officer - 01(i) Oils and Fats
3. Deputy Director - 02(i) Flying Training
4. Associate Pharmaceutical Chemist - 01
5. Investigator Grade-I - 02
6. Sub-Regional Employment Officer/ Officer On Special Duty
7. Deputy Mineral Economist (Intelligence)- 02
8. Assistant Executive Engineer (Electronics)- 05
9. Doctor (GDO) Gr.II - 05

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். SC, ST, PH மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2014

பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசிதேதி: 18.07.2014

மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update

MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update...
TRB TET key answer

சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

CLICK HERE FOR APPLICATION..

பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைதூரக்கல்வி மையம் மற்றும் அதன் கல்வி மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் இணையத்தில் (www.bdu.ac.in/cde) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். விண்ணப்பம் மற்றும் கல்வி மையங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24-ந் தேதி நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி மைய இயக்குநர் கே.ஆனந்தன் அறிவித்துள்ளார். 


சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

வருமான வரிச்சட்டம் 80சி, 80 சிசி, 80 சிசிசி ஆகிய பிரிவுகளின் படி ஒரு லட்ச ரூபாய் வரை சேமிக்கப்படுவதற்கு வரிவிலக்கு உண்டு. வரும் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இந்த வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேமிப்பை அதிகப்படுத்து வதற்கு வங்கியாளர்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். நாட்டில் சேமிப்பும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு சேமிப்பு விகிதம் ஜி.டி.பி.யில் 38 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த 2012-13ம் ஆண்டுகளில் இது 30 சதவீதமாக சரிந்துவிட்டது. இப்போது இந்த வரம்பை அதிகரிக்கும்போது மாத சம்பளக்காரர்களுக்கு ஆறுதலாக இருக்கும். மேலும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சலுகை ஊக்கம் அளிக்கும் என்பதால் இந்த வரம்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. நேரடி வரி விதிப்பு முறையும் ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இன்ஷூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், இ.எல்.எஸ்.எஸ். (மியூச்சுவல் ஃபண்ட்), ஐந்து வருட வங்கி டெபாசிட் உள்ளிட்ட பல வகையில் சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கை பெற முடியும். 

பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:102கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கும் முறை:வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) 2013 செப்டம்பர்/ அக்டோபரில் நடத்திய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் நேர்காணல் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:எஸ்சி, எஸ்டி, பிடபுள்யூடி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாகரூ.20 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

விண்ணப்பிக்கும் முறை:

http://ibpsregistration.nic.in/ibps_pagbank/ என்னும் இணைய முகவரில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:14.07.2014

கூடுதல் தகவலுக்கு:

http://www.pandyangramabank.in/FINAL%20ADVERTISEMENT%20-%20PGB%20-%2027.06.2014.pdf பத்தாம் வகுப்புப் படித்தவருக்குக் கப்பற்படையில் வேலைவிசாகப்பட்டினம் கப்பற்படைத் தளத்தில் ட்ரேட்ஸ்மேன் ஆகப் பணியாற்ற பத்தாம் வகுப்புப் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:299

கல்வித் தகுதி:பத்தாம் வகுப்பு

வயதுத் தகுதி:25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை,http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_60_1415b.pdf ஆன்லைனில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Admiral Superintendent (for CAO), Naval Dockyard, Visakhapatnam-530014, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான நாளில் இருந்து 30 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

(வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான தேதி 21-06-2014 to 27-06-2014)