Tuesday, 6 January 2015

ராமநாதபுரம் ஆட்சியரை கண்டித்து மாவட்ட வருவாய்த்துறையினர் தொடர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை(ஆர்.ஓ.ஏ) சங்கத்தினர் தொடர் ஆர்பாட்டம் நீடித்துள்ளது.

     மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் பணியாளர்கள் விரோத போக்கை கண்டித்தும், ஆட்சியரை உடனடியாக இட மாற்றம் செய்யக்கோரியும் ஆர்.ஓ.ஏ. சங்க்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தினசரி பணிகள் பாதிக்காத வண்ணம்,  பணி நேரம் முடிந்து, மாலை 5.30 மணிக்கு மேல் அந்த்ந்த தாலுகாவில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
 இன்று(செவ்வாய்க்கிழமை) 2- ம் நாள் நடைபெ ற்ற இந்த ஆர்ப்பாட்டம், டிச.9 வரையிலும் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர்(ஓ..ஏ) வரையிலும் சுமார் 340 பேர் பங்கேற்கின்றனர். பின்னர் டி.ச.10(சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் மாவட்ட ஆ ட்சியர் அலுவலரகம் முன்பாக மாவட்ட வருவாய்த்துறையினர் திரண்டு வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். அதன் பின்பும் கோரிக்கை நி்றைவேறாதபட்சத்தில் மாநில முழுவதும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment