பிரதமர் மோடி அறிவித்த, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளிடம், மத்திய அரசு உதவி கோரியுள்ளது.
           பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மாணவர்களின் திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண்களை அளிக்கவும், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் மாறினாலும், இந்த கூடுதல் மதிப்பெண்களை அங்கும் பயன்படுத்தி கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் உதவியை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடியுள்ளது.இதையடுத்து, இன்று, டில்லியில், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகர் ஸ்மிருதி இரானி தலைமை வகிக்கிறார். வரைவு திட்டத்தை உருவாக்குவது குறித்து, மாநில கல்வி அமைச்சர்களிடம், மத்திய அரசு தரப்பில் ஆலோசனை கேட்கப்படவுள்ளது.






0 comments:
Post a Comment