மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்தும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தியும் இம்மாதம் 7-ம் தேதி, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது.
இதனை, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகரத்தில் தற்போது ஒரு சதவீத மாணவர்களுக்கே அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகள் கல்வி அளித்து வருகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் 30 மழலையர் பள்ளிகள், 122 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என 284 பள்ளிகளில் 98,857 மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது.






0 comments:
Post a Comment