This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 25 January 2015

தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி  ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் 2014-15 ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் படி 100 அரசு உ யர்நிவைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மாத ஊதியம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் சென்று கேட்டால் முறையான தகவல் தெரிவிக்கவும் மறுத்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரா.வேல்முருகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டன.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கான அரசு ஆணை 148ல் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு ஆணையை வைத்து மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள்

ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் ஊதியம் பெற முடியாத நிலையிருக்கிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் முறையிட்டோம். அவரும் மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் இதுவரையில் கல்வித்துறையிடம் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என காரணம் கூறி கருவூலத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றார். இது குறித்து கருவூலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பள்ளிகள் தரம் உயர்ததப்படும் போது பணியிடங்களக்கான மொத்த செவினத்திற்கான கருத்துரு பள்ளிக் கல்வி துறையிடம் இருந்து நித்துறை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
அதற்கான ஆணை இன்னும் பெறப்படப்பல்லையென்றும்,
இதனால் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாத நிலை நிலவுவதாக கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒபாமா தில்லி வந்தடைந்தார்

குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மனைவியுடன்  தில்லி வந்து
சேர்ந்தார். தில்லி பாலம் ஏர்போர்டை வந்தடைந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஒபாமாவுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், கூட்டாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பது, ஆக்கப்பூர்வ அணுசக்தியில் நிலவும் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 24 January 2015

தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம்
பேர் சனிக்கிழமை எழுதினர்.
இந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பள்ளிக் கல்வித் துறையிடம் முடிவுகள் ஒப்படைக்கப்படும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்:

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை
 ''மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,'' என 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நா
யர் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கோவையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 'இஸ்ரோ' தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இருந்ததாக கூறப்பட்டதே? நான் தலைவராக இருக்கும்வரை அந்தகைய செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அதற்குபிறகு, தலைவர் தேர்ந்தெடுப்பதில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜி.பி.எஸ்., உதவியுடன், பூமியில் இருக்கக்கூடிய இடங்கள், பொருட்களை மிக அருகில் சென்று பார்ப்பது போல் பார்க்க முடிகிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்குமா ? இது ஆரோக்கியமான வளர்ச்சிதான். ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பொறுத்தவரை, இந்தியா இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. 
அதிக செயல்திறன் கொண்ட இன்னும் ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட வுள்ளது. அது ஏவப்பட்டதும், இந்தியா தனக்கே உரிய ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பயன்படுத்தும். தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் குறைந்து வருகிறதே ? பொதுவாக மாணவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை பெற்றோர் ஆராய வேண்டும். ஆர்வம் உள்ள துறையில் மாணவர்கள் படித்து அந்த துறைக்கே உரிய அறிவை பெற வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் மதிப்பெண்னை தான் தேடுகிறார்கள். அறிவைத்தேடும் படிப்பு இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அமை
ப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு
ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) எனப்படும் பி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் ஊழியர்களின் சம்பள முறை, CTC ( Cost to the Company) அடிப்படையில் இருந்தால், நிறுவன பங்காக செலுத்தப்படும் தொகையும் ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்பட்டு செலுத்தப்படும். அதாவது ஒரு ஊழியருக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவிட தீர்மானிக்கிறதோ, அது மொத்தமாக கணக்கிடப்பட்டு முதலிலேயே ஒருவருக்கு சம்பளம் இவ்வளவு என்று தெரிவிக்கப்படும். இந்நிலையில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒருமுறை வேலைக்கு சேர்ந்துவிட்டால், பெரும்பாலும் ஓய்வுபெறும் வரை பணியாற்றுகின்றனர். நோய் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வேலையை விடுவதில்லை. அரசு வேலையை விட்டு தனியார் வேலைக்கு செல்வதும் ரொம்பவே அரிது. அதே சமயம் இன்றைய போட்டி நிறைந்த உலகில், தனியார் நிறுனங்களில் பணியாற்றுபவர்கள் அதிக சம்பளம், வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, வேலை திருப்தி ( Job satisfaction), சொந்த ஊரில் வேலை, குடும்பத்தினருடன் இருப்பது, குழந்தைகளின் படிப்பு, பெற்றோர்களை கவனிக்க வேண்டியது என பல்வேறு காரணங்களுக்காக வேலை மாறுகின்றனர். சிலர் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதத்திலேயே வேறு நிறுவனத்திற்கு மாறுகின்றனர் என்றால், சிலர் ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளில் மாறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில், ஒரே நிறுவனத்தில் ஓய்வு பெறும் வரை வேலை பார்ப்பவர்கள் என்பது மிகக்குறைவான சதவீதத்தினரே. இவ்வாறு வேலை மாறுபவர்கள் அல்லது வேலையை விடுபவர்கள், தாங்கள் பணிபுரிந்த காலத்தில் செலுத்திய பி.எப். பணத்தை உடனடியாக விண்ணப்பித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று விடுகின்றனர். புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் தரப்படும் பி.எப். கணக்கு எண்ணுக்கு, தாங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பி.எப். கணக்கில் சேர்ந்த தொகையை மாற்றிக்கொள்ளலாம் என்றபோதிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறிப்பாக பழைய நிறுவனத்திற்கு அலைவது உள்ளிட்ட காரணங்களால் அதனை செய்ய முன்வருவதில்லை. இதனால் முந்தையை பி.எப். பணத்தை எடுத்து ( with draw ) விடுகிறார்கள். இன்னும் சில குறிப்பிட்ட சதவீதத்தினர், முன்பு வேலை செய்த நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எப். தொகை ஒரு சில ஆயிரங்களுக்குள் இருக்கும்பட்சத்தில், அதனை எடுக்காமலேயே விட்டுவிடுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத்தான் வேலை செய்யும் பணியாளர்கள் ஒவ்வொருக்கும் நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒருவர் எத்தனை நிறுவனங்களுக்கு வேலை மாறினாலும் அவரது பி.எப். கணக்கு மாறாது. தொடர்ந்து அதே எண்ணிலேயே பி.எப். -பிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை செலுத்தப்படும். இந்த திட்டம் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக வேலை செய்வோர், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதாவது பி.எப். பணத்தை எடுக்க ஒருவர் விண்ணப்பித்தால், அவர் 50 வயதை எட்டியிருந்தால் மட்டுமே முழு தொகையும் வழங்கப்படும். 50 வயது ஆகவில்லை என்றால், வழங்கப்பட வேண்டிய பி.எப். பணத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்துகொள்ளப்படும். அந்த தொகை, சம்பந்தப்பட்ட நபர் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, மீண்டும் பி.எப். கணக்கில் செலுத்தும் தொகையுடன் சேர்ந்து கொள்ளும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே. ஜலான், அண்மையில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு, அதனை அமல்படுத்த ஒப்புதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்ட விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டம் முழுமையடைந்துவிட்டால், வேலை மாறுவதால் பி.எப். பணத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என ஜலான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்ச்சி பெறாமல் சட்டம் படித்தவர் வக்கீலாக பணியாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 1997–ம் ஆண்டு பாப்புதுரை என்பவர் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் 1999–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்தார். ஆனால் ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அழகப்பா
பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பி.ஏ. படித்தார். அதன் பிறகு 2010–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோல்வி அடைந்த பாடத்தை எழுதி, பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அதைத்தொடர்ந்து நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்துவிட்டு, 2013–ம் ஆண்டு பார் கவுன்சிலில் வக்கீலாக தனது பெயரை பதிவு செய்ய பாப்புதுரை முயன்றார். ஆனால் அவரது கல்வி குறித்து அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு புகார் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் பாப்புதுரையிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யும்படி ஐகோர்ட்டில் பாப்புதுரை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்து விட்டு அதன் பிறகே சட்டப்படிப்பு படிக்க வேண்டும். ஆனால் இந்த கல்வி விதிகளை அவர் பின்பற்றவில்லை. எனவே அவர் வக்கீலாக தொழிலாற்ற முடியாது.
என்றாலும், அவர் படிப்பு வெறும் காகிதமாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. அவருக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வழங்குவதில் கோர்ட்டு குறுக்கே நிற்காது. ஆனால் வக்கீல் தொழிலாற்றும் உரிமையை அவர் கோர முடியாது. பல்கலைக்கழகத்தின் நோட்டீசும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இணையதளத்தில்:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டது. இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர். பெரும்பாலும் தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று சான்றிதழ் பதிவிறக்கம் செய்தனர். அப்போது, இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒருசில தவறுகளால், பலருக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. இதனால், டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தற்போது டி.இ.டி., தேர்ச்சி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி.,க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.


மீண்டும் வாய்ப்பு:

இதன்பின் சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், ஜன., 19 முதல், பிப்., 14 வரை அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்க, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், அதிலும் பலருக்கு சான்றிதழ்
கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: டி.ஆர்.பி., இணையதளத்தில், ஒரு முறை மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற முறை பலர், தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்தனர். தற்போது, டி.ஆர்.பி., அனுப்பிய சான்றிதழ்களில் அவர்களுக்கான சான்றிதழ் வரவில்லை. இணையதளத்தில் அவர்கள் விண்ணப்பித்தால், 'பதிவிறக்கம் செய்யப்பட்டது' என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.பி., கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்:

பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தால் தான், இந்த குழப்பம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்று வழங்குவதுபோல் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் குழப்பம் ஏற்படாது' என்றார்.

பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு

விருதுநகர்: வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூனில் பள்ளி திறக்கப்பட்டதும், சில பள்ளிகளில் பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டதாக புகார் எழுந்தது. இப்பிரச்னையை தவிர்க்க வரும் கல்வியாண்டில் (2015 - 16) பள்ளி வாரியாக தேவைப்படும் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. அதற்கேற்றவாறு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து மாவட்ட தலைநகரங்களுக்கு தமிழ், ஆங்கிலவழி புத்தகங்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைத்து கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 பாடப்புத்தங்களும் விரைவில் வரவுள்ளன. மேல்நிலை மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி புத்தகம் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு

சென்னை: சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் பொதுச் செயலர் விஜயகுமார், முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க ஊதிய விகித முரண்பாடு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டிச., 18ல், தமிழக பள்ளிக்கல்வித்துறை எதிர் மனு தாக்கல் செய்தது. அதில், 'கடந்த ஊதியக் குழுவில், முதுநிலை பட்டதாரி - பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊதிய குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்வித்துறையின், 1969 அரசாணையின் படி, உயர்கல்வி ஊக்க ஊதியத்தால் ஏற்பட்டுள்ள வேறுபாட்டை களைய இயலாது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே கல்வித் தகுதியில், ஒரே நாளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை விட அதிகமாக ஊதியம் பெறும் வேறு பாட்டை களைய, வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கல்வித்துறை தாக்கல் செய்த, எதிர்மனுவில் கூறப்பட்டுள்ள முரணான கருத்துக்களை எதிர்த்து, நீதிமன்றம் மூலம், தொடர் நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்து உள்ளோம். அதே நேரம், அரசின் எதிர்மனுவால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ள, கடும் அதிருப்தி யை வெளிப்படுத்த, கிருஷ்ணகிரியில் நடக்கும் பொதுக்குழுவில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை

வேலூர்: தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித் தகவல் முறையின் கீழ் இந்த தகவல் கிடைத்ததும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு ஆண்டில் 6,000த்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள், தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல், பயன்படுத்தப்படாத, 300 கழிப்பறைகளிலும், சிறிய அளவிலான பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்:இளைஞர்களுக்கு கலாம் வேண்டுகோள்

ஜெய்ப்பூர்:உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம் இவ்வாறு பேசினார்.

கலாம் தனது அனுபவங்கள் குறித்து பேசியதாவது:நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு செலக்சன் பேனலுக்கு போன போது அங்கே 10 பேர் இருந்தார்கள். இருப்பது 9 சீட் மட்டுமே.கடைசியில் என்னை தான் கழற்றி விட்டார்கள்.
எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வரமுடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாக பின்னாளில் வந்துவிட்டேன்.
நான் ஜனாதிபதியானதும் விமானப்படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்று தருமாறு கேட்டுகொண்டேன்.6 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.இருந்தாலும் என்னால் பைலட்டாக முடியவில்லை என்றாலும் இன்று வரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்தது. என்னுடைய கனவுகள் எண்ணங்களானது. என் எண்ணங்கள் செயலாக மாறியது.
உங்கள் கனவுகள் நனவாக உங்களுக்கு நான் ஒரு மந்திரத்தை கொடு்க்கிறேன்.. 'உங்கள் திறமையின் மீது ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்'. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் நான் கொடுத்த இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். அங்குதான் பிரச்சனைகள் தொடங்கிவிடுகின்றன. உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவைமாற்றுவோம் என உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு

கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு



போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்
ட சிறப்பாசிரியர்கள்முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், சிறப்பாசிரியர்களை இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பான அரசாணை கடந்த 17.11.2014 அன்று வெளியானது.அதன்படி, 95 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5மதிப்பெண்ணுக்கு புதிய முறை கடைப்பிடிக்கப்படும். அதாவது, கூடுதல் கல்வித்தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளிகளில் பணியாற்றிய அனு பவம் இருப்பின் அதற்கு 1 மதிப் பெண், தனியார் பள்ளி அனுபவம் என்றால் அரை மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (பைன் ஆர்ட்ஸ்) சாதனை போன்ற இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்காணலுக்கு ஒன்றரை மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண் வழங்கப்படும்.
1,000 காலியிடங்கள்
புதிய தேர்வுமுறையில் 530 உடற்கல்வி ஆசிரியர், 250 ஓவிய ஆசிரியர், 160 தையல் ஆசிரியர், 55 இசை ஆசிரியர் என ஏறத்தாழ 1000 சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்தது.இந்த நிலையில், எழுத்துத் தேர்வு நீங்கலான எஞ்சிய 5 மதிப்பெண்ணில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளதால் அதனால் நடைமுறை சிக்கல் ஏற்படக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக காத்திருப்பதால் பதிவுமூப்புக்கும் (சீனியாரிட்டி) குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாம் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
புதிய தேர்வுமுறையிலும் மாற்றம்
இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவுசெய்துள்ளது. அரை மதிப்பெண் வழங்கும் முறையைகைவிட்டுவிட்டு, எளிதாக கணக்கிடும் வண்ணம் முழு எண்ணில் மதிப்பெண் வழங்கவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு பதிவு செய்த வருடத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாமா? என்பது குறித்தும் அரசு திட்டமிட்டு வருவதாக ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, 23 January 2015

பன்றிக் காய்ச்சல் : 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையால் இருந்தால் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் பரவுவது வழ
க்கம். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோயை பருவ காலங்களில் ஏற்படும் சாதாரணக் காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மனிதனில் இருந்து...: பன்றிக் காய்ச்சலைப் பொருத்தவரை இருமும்போதோ, தும்மும்போதோ ஒருவரிடம் இருந்து வைரஸ் கிருமி பரவும். எனவே கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சாப்பிடுவதற்கு முன், கழிவறையைப் பயன்படுத்திய பின், வீட்டிலிருந்து அலுவலகம் சென்ற உடன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் என குறைந்தது ஒரு நாளைக்கு பத்து முறையாவது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 நாளைக்கு மேல்...: ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக சரியான மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுக வேண்டும். சுய மருத்துவம், அருகிலிருக்கும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்குவது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக பன்றிக் காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதைனையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் அனுப்பலாம்

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழ
மை வெளியிடப்பட்டன.
தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு 
அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.

மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு: ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி நடத்தும் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பில் சேர வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2-வி
ல் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். தொழிற்கல்வி என்றால் மருத்துவ ஆய்வுக்கூட நுட்பவியலாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் 50 சதவீத கூட்டு மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 45 சதவீத கூட்டு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 17 வயது பூர்த்தியாகி இருப்பதோடு 32 வயதுக்குள்பட்டவர்களே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம் 2 ஆண்டுகள். பயிற்சி மொழி ஆங்கிலம். மாதக் கட்டணம் ரூ.300. இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
படிவங்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். வருகிற 27-ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய புதிய வசதி அறிமுகம்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பாஸ்போர்ட் வருவது தாமதமானால் காரணம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போ
ர்ட் அலுவலகத்தில் விவரம் தெரிவிக்க சோஷியல் ஆடிட் செல் என்ற பிரிவு
தொடங்கப்பட்டுள்ளது. வார வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் பபல் 12.30 வரை புதிய பிரிவு செய்ல்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமைகளில் சோஷியல் ஆடிட் இயங்காது என்று பாஸ்போர்ட் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளமையங்களில் ஆசிரியர் பயிற்றுநர்களாக 55 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆசிரிய, ஆசிரியை பயிற்றுநர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென மாற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஊதியம் பெற முடியாத நிலையேற்படும். இதையடுத்து மாறுதல் உத்தரவை பெற மறுத்தும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளை கண்டித்தும் அலுவலக வளாகம் முன்பு பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், இம்மாவட்டத்தில் இத்திட்டத்தில் போதுமான நிதி இல்லை. அதனால் பயிற்றுநர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனால், இத்திட்டத்தில் நிதியுள்ள மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 15 மாவட்டங்களில் உள்ள பயிற்றுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், இம்மாவட்டத்திலும் 55 பேர் மாற்றப்பட்டனர். இது தொடர்ந்து ஊதியம் பெறும் வகையில் தாற்காலிகமான ஏற்பாடுதான், அதையடு்த்து 3 மாதங்களுக்கு பின் கூடுதல் பொறுப்புடன் ஏற்கனவே பணியாற்றிய இடங்களிலேயே வேலை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அறியாமல் ஆசிரிய பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவி்த்தார்.      

சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் நானோ அறிவியல் தொழில்நுட்ப மையம் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி

சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் நானோ அறிவியல் தொழில் நுட்ப மையம் தொடங்கப்படுகிறது என்று துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.100 கோடியில் நானோ அறிவியல் தொழில் நுட்ப மையம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ரூ.100 கோடியை வழங்கி உள்ளது. அதில் நானோ அறிவியல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. அதற்காக முதல் கட்டமாக ரூ.25 கோடியில் கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது நானோ அறிவியல் தொழில் நுட்ப மையத்திற்கு 10 ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். 10 பேர்களில் 2 பேர் பேராசிரியர்கள். 4 பேராசிரியர்கள் தேவை. ஆனால் தகுதியான பேராசிரியர்கள் இல்லாததால் 2 பேர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 ரீடர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 7 விரிவுரையாளர்கள்(லெக்சரர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 10 பேர்களும் சேர்ந்து நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு தேவையான கருவிகள், தளவாடப்பொருட்களை வாங்குவார்கள்.
இந்த மையம் வேதியியல் அறிவியல், உயிரி அறிவியல், இயற்பியல் அறிவியல் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.
பதிவாளர் பணி நீட்டிப்பு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஜவகர் பதவி முடிவடைந்துவிட்டது. எனவே மேலும் அவருக்கு 2 வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டவை.
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வியை பொருத்தவரை மாணவர்கள் கல்வி கட்டணம் கட்டுவதும் ஆன்லைனில்தான், அவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்குவதும் ஆன்லைனில்தான். இப்படி பல காரியங்கள் மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
முழு செயல்பாடு நானோ அறிவியல் தொழில்நுட்ப மையம் இப்போதே தொடங்கப்பட்டதாக இருந்தாலும் ஆசிரியர்கள் அந்த மையத்திற்கான கருவிகள் வாங்கிய பின்னர்தான் அதன் முழு செயல்பாடும் தொடங்கும்.
இவ்வாறு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவல்


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை ரூ.3 கோடியே 18
லட்சம் வழங்கப்படாமல் இருந்தது. அந்த தொகை இப்போது வழங்கப்பட்டு விட்டது. அந்த ஆசிரியர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

25–ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 25–ந் தேதி அன்று தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

5–வது ஆண்டு இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஜனநாயக தேர்தல் முறைகளில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25–ந் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் 2011–ம் ஆண்டில் இருந்து கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 25–ந் தேதியை ஐந்தாவது தேசிய வாக்காளர் தினமாக மாநிலமெங்கும் நாம் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டின் மையநோக்கு ‘‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’’ என்பதாகும்.
கவர்னர் சிறப்புரை தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள அனைத்து 28 ஆயிரத்து 850 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில அளவிலான விழா, தமிழக கவர்னரின் தலைமையில் 25–ந் தேதி அன்று காலை 11 மணி அளவில் சென்னையில் கவர்னர் மாளிகையில் நடைபெறும். அந்த விழாவில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்கவைத்து, கவர்னர் சிறப்புரையாற்றுவார்.
கலை நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் தேர்தல் பணி புரிந்த அலுவலர்களுக்கு விருது வழங்குவதுடன் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் அவர் வழங்குவார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், தமிழக தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வாழ்த்துரை வழங்குவார்கள்.
வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றலின் முக்கியத்துவத்தையும், அதில் இளைஞர்களின் பங்கையும், ‘‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’’ என்ற மையக்கருத்தை உணர்த்தும் வகையில் இவ்விழாவில் பள்ளிச் சிறார் மற்றும் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்ந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாவட்டங்களில் விழாக்கள் இதே போல் மாவட்ட அளவிலான விழாக்களிலும், வாக்குச்சாவடி நிலையிலான விழாக்களிலும் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழியினை வாக்காளர்களை ஏற்க செய்வதோடு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளன. 23–ந் தேதி அன்று (நேற்று) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டன. இதேபோல் 26–ந் தேதி அன்று நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டங்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும்.
குடியரசு தின பேரணி சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா பேரணியில், ‘‘சுலபமான பதிவு; சுலபமான திருத்தம்’’ என்னும் மையநோக்கின் அடிப்படை குறித்த ஒரு அலங்கார ஊர்தியும் இடம் பெறும். தேசிய வாக்காளர் தினத்திற்கு முன்னோடி நிகழ்ச்சிகளாக மாவட்டங்களில் ஏற்கனவே பேரணிகள், மினி மராத்தான் ஓட்டங்கள், விவாதங்கள், மனித சங்கிலி நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள், பலூன்கள் மூலம் விளம்பரங்கள் முதலியவை நடத்தப்பட்டு வருகின்றன.
சட்டத்திற்கு புறம்பான தூண்டுதல்களுக்கு ஆட்படாமல் கண்ணியத்துடன் மனசாட்சிப்படி வாக்களித்தல் மற்றும் வாக்காளர் பங்கேற்பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்விரு செய்திகளையும் பரப்புரை செய்திட அரசுத்துறைகளின் களப்பணியாளர்களையும் இதில் ஈடுபடுத்தியுள்ளோம்.
நேரடி ஒளிபரப்பு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினவிழா நிகழ்ச்சியினை தலைமை தேர்தல் அதிகாரியின் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் காலை 10.55 முதல் நேரடி ஒளிபரப்பின் மூலம் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் பணிக்கான நேர்காணல் தேர்வு 28–ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு தலைமை செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர்(மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப்பணி இடங்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3–ந்தேதி நடைபெற்றது. மேற்படி, பதவிக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் தேர்வு வரும் 28–ந்தேதி(புதன்கிழமை) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாட்சிம் கார்டு அறிமுகம்!

150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம்
        உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான வாட்ஸ் அப்-க்கு உலகெங்கும் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்காக தற்போது வாட்சிம் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இத்தாலியை சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனுவல் ஜினுல்லா கூறுகையில், “இந்த சேவையின் மூலம் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது அதிக அளவிலான ரோமிங் கட்டணங்கள் செலுத்தவோ, இலவச வை-பை கிடைக்கும் இடத்தை
தேடி அலையவோ தேவையில்லை. வாட்சிம்மை பயன்படுத்தி 150 நாடுகளில் வாட்ஸ் அப்பை எல்லையின்றி உபயோகித்து நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்” என்றார்.
இந்த வாட்சிம்மின் விலையாக 10 யூரோவும் (சுமார் 714 ரூபாய்) உலகம் முழுவதுற்கும் அனுப்பி வைப்பதற்கு ஒரே  கட்டணமாக 5 யூரோவும் (சுமார் 350 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டை பெறவும் ரீசார்ஜ் செய்யவும் வாட்சிம் நிறுவனத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த சிம் கார்டை, உள்ளுர் விநியோகஸ்தர்கள் மூலம் 100 நாடுகளில்  கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஜீரோ மொபைல் திட்டமிட்டுள்ளது.  

இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி

         தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

              இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் செ.முத்துசாமி கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொடக்கக்கல்வி
அலுவலகம் மூலம் ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
 
           ஒவ்வோர் மாதமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் 400 முதல் 600 வரையிலான எண்ணிக்கைஉள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி மாதமே புதிய “இ
பேரோல்” முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்படவேண்டும் என்ற கண்டிப்பான அறிவுறை கருவூல அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம், அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியகளுக்கு ஊதியபட்டியலை ஒரே மாதத்தில்,அதுவும் வருமான்வரி,தொழில்வரி கணக்கிடப்படும். பிப்ரவரி மாதத்திலேயே புதிய “இ பேரோல்” செய்ய வேண்டும் என்று கருவூல அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் ஊதியம் பெறுவது பாதிக்கப்படும் ,எனவே இம்முறையை அமுல் படுத்த கால அவகாசம் கோரவேண்டும் என்று இயக்குனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முயன்றபோது அவரின் சார்பாக இணைஇயக்குனர் திருமதி லதா அவர்கள்,இயக்குனர் விடுப்பு முடித்து திரும்பிய உடன் இது குறித்து மாநில கருவூல அலுவலருடன் கலந்தாலோசனை செய்து கால அவகாசம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்

7TH PAY COMMISSION PAY AND ALLOWANCES ESTIMATION – GCONNECT CALCULATOR 

READERS MUST BE AWARE, WE ESTIMATED 7TH PAY COMMISSION PAY SCALE AS ON 01.01.2016 IN THE MONTH OF APRIL 2014 AFTER CONSTITUTION OF 7TH PAY COMMISSION FOLLOWING METHODS ADOPTED BY 6TH PAY COMMISSION FOR REVISING CENTRAL GOVERNMENT EMPLOYEES PAY AND ALLOWANCES.

These are estimated 7th CPC Pay Scales and entry Pay in each of these projected Pay in Pay Band

7th Pay Commission projected Pay Scale – Revised Pay Bands, Grade Pay, Starting Pay in PB and Entry Pay

Pre RevisedPay ScalePB6 CPCPay bandsGradePay7th CPCPay Band7th CPCGrade Pay
S-1, S-2,15200-20200180014160-483607500
S-315200-20200180014160-483607500
S415200-20200180014160-483607500
S-515200-20200190014290-484907700
S-615200-20200200014420-486207800
S-715200-20200240014930-491308400
S-815200-20200280015440-496409000






S-929300-34800420026580-8472014900
S-1029300-34800420026580-8472014900
S-1129300-34800420026580-8472014900
S-1229300-34800420026580-8472014900
S-1329300-34800460027100-8524015500
S-1429300-34800480027350-8549015800
S-1529300-34800540028120-8626016700






New315600-39100540042480-9606022400
S-16315600-39100540042480-9606022400
S-17315600-39100540042480-9606022400
S-18315600-39100660044020-9760024300
S-19315600-39100660044020-9760024300
S-20315600-39100660044020-9760024300
S-21315600-39100760045300-9888025800
S-22315600-39100760045300-9888025800
S-23315600-39100760045300-9888025800






S-24437400-67000870096410-16390047300
S-25437400-67000870096410-16390047300
S-26437400-67000890096670-16416047600
S-27437400-67000890096670-16416047600
S-28437400-670001000098080-16556049300
S-29437400-670001000098080-16556049300
S-30437400-6700012000100640-16812052300

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்...!!

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது.குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடுதண்ணீருக்கான சண்டைகள்அதிகரித்து வருகிறதுஇப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாகமாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
 
          தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டுஇந்தியாவில்கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வுசெய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர்ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
 
          "நீரின்றி அமையாது உலகு"இது வள்ளுவர் வாக்குஇன்னொரு உலகப் போர்மூண்டால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதுஅந்தஅளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுவரும் 2030ல்தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என .நா.வின் நீர்வளஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம்வெப்பமடைந்து வரும் பூமிஅதிகரித்து வரும் மக்கள்தொகைபோன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறைஏற்பட்டுள்ளதுஉலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு,ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை .நா மன்றம் மேற்கொண்டுள்ளது ..!!