This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, 25 January 2015

தரம் உயர்த்திய பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி  ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் 2014-15 ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-ன் படி 100 அரசு உ யர்நிவைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக மாத ஊதியம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் சென்று கேட்டால் முறையான தகவல் தெரிவிக்கவும் மறுத்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரா.வேல்முருகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 900 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டன.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கான அரசு ஆணை 148ல் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு ஆணையை வைத்து மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள்

ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் ஊதியம் பெற முடியாத நிலையிருக்கிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் முறையிட்டோம். அவரும் மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் இதுவரையில் கல்வித்துறையிடம் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என காரணம் கூறி கருவூலத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றார். இது குறித்து கருவூலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பள்ளிகள் தரம் உயர்ததப்படும் போது பணியிடங்களக்கான மொத்த செவினத்திற்கான கருத்துரு பள்ளிக் கல்வி துறையிடம் இருந்து நித்துறை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
அதற்கான ஆணை இன்னும் பெறப்படப்பல்லையென்றும்,
இதனால் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாத நிலை நிலவுவதாக கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒபாமா தில்லி வந்தடைந்தார்

குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மனைவியுடன்  தில்லி வந்து
சேர்ந்தார். தில்லி பாலம் ஏர்போர்டை வந்தடைந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஒபாமாவுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், கூட்டாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பது, ஆக்கப்பூர்வ அணுசக்தியில் நிலவும் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, 24 January 2015

தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம்
பேர் சனிக்கிழமை எழுதினர்.
இந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பள்ளிக் கல்வித் துறையிடம் முடிவுகள் ஒப்படைக்கப்படும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.500 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்:

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை
 ''மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,'' என 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நா
யர் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கோவையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 'இஸ்ரோ' தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இருந்ததாக கூறப்பட்டதே? நான் தலைவராக இருக்கும்வரை அந்தகைய செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அதற்குபிறகு, தலைவர் தேர்ந்தெடுப்பதில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜி.பி.எஸ்., உதவியுடன், பூமியில் இருக்கக்கூடிய இடங்கள், பொருட்களை மிக அருகில் சென்று பார்ப்பது போல் பார்க்க முடிகிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்குமா ? இது ஆரோக்கியமான வளர்ச்சிதான். ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பொறுத்தவரை, இந்தியா இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. 
அதிக செயல்திறன் கொண்ட இன்னும் ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட வுள்ளது. அது ஏவப்பட்டதும், இந்தியா தனக்கே உரிய ஜி.பி.எஸ்., சிஸ்டத்தை பயன்படுத்தும். தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் குறைந்து வருகிறதே ? பொதுவாக மாணவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை பெற்றோர் ஆராய வேண்டும். ஆர்வம் உள்ள துறையில் மாணவர்கள் படித்து அந்த துறைக்கே உரிய அறிவை பெற வேண்டும். இன்றைய சூழலில் மாணவர்கள் மதிப்பெண்னை தான் தேடுகிறார்கள். அறிவைத்தேடும் படிப்பு இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அமை
ப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு
ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) எனப்படும் பி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் ஊழியர்களின் சம்பள முறை, CTC ( Cost to the Company) அடிப்படையில் இருந்தால், நிறுவன பங்காக செலுத்தப்படும் தொகையும் ஊழியரின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்பட்டு செலுத்தப்படும். அதாவது ஒரு ஊழியருக்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு செலவிட தீர்மானிக்கிறதோ, அது மொத்தமாக கணக்கிடப்பட்டு முதலிலேயே ஒருவருக்கு சம்பளம் இவ்வளவு என்று தெரிவிக்கப்படும். இந்நிலையில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒருமுறை வேலைக்கு சேர்ந்துவிட்டால், பெரும்பாலும் ஓய்வுபெறும் வரை பணியாற்றுகின்றனர். நோய் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வேலையை விடுவதில்லை. அரசு வேலையை விட்டு தனியார் வேலைக்கு செல்வதும் ரொம்பவே அரிது. அதே சமயம் இன்றைய போட்டி நிறைந்த உலகில், தனியார் நிறுனங்களில் பணியாற்றுபவர்கள் அதிக சம்பளம், வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, வேலை திருப்தி ( Job satisfaction), சொந்த ஊரில் வேலை, குடும்பத்தினருடன் இருப்பது, குழந்தைகளின் படிப்பு, பெற்றோர்களை கவனிக்க வேண்டியது என பல்வேறு காரணங்களுக்காக வேலை மாறுகின்றனர். சிலர் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதத்திலேயே வேறு நிறுவனத்திற்கு மாறுகின்றனர் என்றால், சிலர் ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளில் மாறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில், ஒரே நிறுவனத்தில் ஓய்வு பெறும் வரை வேலை பார்ப்பவர்கள் என்பது மிகக்குறைவான சதவீதத்தினரே. இவ்வாறு வேலை மாறுபவர்கள் அல்லது வேலையை விடுபவர்கள், தாங்கள் பணிபுரிந்த காலத்தில் செலுத்திய பி.எப். பணத்தை உடனடியாக விண்ணப்பித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்று விடுகின்றனர். புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் தரப்படும் பி.எப். கணக்கு எண்ணுக்கு, தாங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பி.எப். கணக்கில் சேர்ந்த தொகையை மாற்றிக்கொள்ளலாம் என்றபோதிலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் குறிப்பாக பழைய நிறுவனத்திற்கு அலைவது உள்ளிட்ட காரணங்களால் அதனை செய்ய முன்வருவதில்லை. இதனால் முந்தையை பி.எப். பணத்தை எடுத்து ( with draw ) விடுகிறார்கள். இன்னும் சில குறிப்பிட்ட சதவீதத்தினர், முன்பு வேலை செய்த நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எப். தொகை ஒரு சில ஆயிரங்களுக்குள் இருக்கும்பட்சத்தில், அதனை எடுக்காமலேயே விட்டுவிடுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத்தான் வேலை செய்யும் பணியாளர்கள் ஒவ்வொருக்கும் நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒருவர் எத்தனை நிறுவனங்களுக்கு வேலை மாறினாலும் அவரது பி.எப். கணக்கு மாறாது. தொடர்ந்து அதே எண்ணிலேயே பி.எப். -பிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை செலுத்தப்படும். இந்த திட்டம் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக வேலை செய்வோர், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதாவது பி.எப். பணத்தை எடுக்க ஒருவர் விண்ணப்பித்தால், அவர் 50 வயதை எட்டியிருந்தால் மட்டுமே முழு தொகையும் வழங்கப்படும். 50 வயது ஆகவில்லை என்றால், வழங்கப்பட வேண்டிய பி.எப். பணத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்துகொள்ளப்படும். அந்த தொகை, சம்பந்தப்பட்ட நபர் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, மீண்டும் பி.எப். கணக்கில் செலுத்தும் தொகையுடன் சேர்ந்து கொள்ளும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே. ஜலான், அண்மையில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு, அதனை அமல்படுத்த ஒப்புதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்ட விதிகளில் உரிய திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், நிரந்தர பி.எப். கணக்கு எண் (Universal Account Number -UAN) வழங்கும் திட்டம் முழுமையடைந்துவிட்டால், வேலை மாறுவதால் பி.எப். பணத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என ஜலான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்ச்சி பெறாமல் சட்டம் படித்தவர் வக்கீலாக பணியாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 1997–ம் ஆண்டு பாப்புதுரை என்பவர் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் 1999–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்தார். ஆனால் ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அழகப்பா
பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பி.ஏ. படித்தார். அதன் பிறகு 2010–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோல்வி அடைந்த பாடத்தை எழுதி, பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அதைத்தொடர்ந்து நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்துவிட்டு, 2013–ம் ஆண்டு பார் கவுன்சிலில் வக்கீலாக தனது பெயரை பதிவு செய்ய பாப்புதுரை முயன்றார். ஆனால் அவரது கல்வி குறித்து அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு புகார் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் பாப்புதுரையிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யும்படி ஐகோர்ட்டில் பாப்புதுரை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்து விட்டு அதன் பிறகே சட்டப்படிப்பு படிக்க வேண்டும். ஆனால் இந்த கல்வி விதிகளை அவர் பின்பற்றவில்லை. எனவே அவர் வக்கீலாக தொழிலாற்ற முடியாது.
என்றாலும், அவர் படிப்பு வெறும் காகிதமாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. அவருக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வழங்குவதில் கோர்ட்டு குறுக்கே நிற்காது. ஆனால் வக்கீல் தொழிலாற்றும் உரிமையை அவர் கோர முடியாது. பல்கலைக்கழகத்தின் நோட்டீசும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இணையதளத்தில்:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டது. இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர். பெரும்பாலும் தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று சான்றிதழ் பதிவிறக்கம் செய்தனர். அப்போது, இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒருசில தவறுகளால், பலருக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. இதனால், டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தற்போது டி.இ.டி., தேர்ச்சி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி.,க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.


மீண்டும் வாய்ப்பு:

இதன்பின் சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், ஜன., 19 முதல், பிப்., 14 வரை அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்க, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், அதிலும் பலருக்கு சான்றிதழ்
கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: டி.ஆர்.பி., இணையதளத்தில், ஒரு முறை மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற முறை பலர், தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்தனர். தற்போது, டி.ஆர்.பி., அனுப்பிய சான்றிதழ்களில் அவர்களுக்கான சான்றிதழ் வரவில்லை. இணையதளத்தில் அவர்கள் விண்ணப்பித்தால், 'பதிவிறக்கம் செய்யப்பட்டது' என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.பி., கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்:

பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தால் தான், இந்த குழப்பம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்று வழங்குவதுபோல் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் குழப்பம் ஏற்படாது' என்றார்.