Pages - Menu

Wednesday, 14 January 2015

புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா

டிதுடில்லி: தலைமை ேதர்தல் கமிஷனராக இருந்த சம்பத் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய தேர்தல் கமிஷனராக ஹரிசங்கர் பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1950, ஏப்.19ல் பிறந்தார். அசாமில் கவுகாத்தியில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் படித்தார். பட்டப்படிப்பை ஷில்லாங், செயின்ட் எட்மண்ட்ஸ் கல்லூரியில் முடித்து, கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் அரசியல்
அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றார்.1975ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். ஆந்திராவில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் என பல பொறுப்புகள் வகித்தார்.மத்திய மின்துறை செயலராக பொறுப்பு வகித்தார். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறப்பு, கூடுதல் செயலராகவும் இருந்தார்.
இவர், வடகிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரியான இரண்டாவது நபர். இதற்கு முன் ஜேம்ஸ் மைக்கேல் லங்டோக் வடகிழக்கு மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment