Pages - Menu

Saturday, 8 November 2014

TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு: 11 ஆயிரத்து 493 பேர் எழுதுகின்றனர்.

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.கணினி வழித்தேர்வு காலையிலும், எழுத்து தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகின்றன.


         தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 44 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 11 ஆயிரத்து 493 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே, முதற்கட்ட தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தகுதி பெற்றவர்கள் இன்று நடைபெறும் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

           இதில், தேர்வு செய்யப்படும் ஆயிரத்து 64 பேர் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில், வெற்றி பெறுபவர்கள், நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர்.

No comments:

Post a Comment