Pages - Menu

Wednesday, 19 November 2014

மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு

ரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும்ஊழியர் கள் இணைந்து காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம்தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவுசெய்யப் பட
உள்ளதாக மத்தியஅரசு ஊழி யர் மகாசம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர்எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்தியஅரசு ஊழியர்களின் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; 7-வதுஊதியக் குழுவின் இறுதி முடிவுக்கு முன்பாகமத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்காலநிவாரணம் வழங்க வேண்டும்; மத்தியஅரசு அலுவல கங்களில் காலியாகஉள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்மகா சம்மேளனம் சார்பில் நாடு முழு வதும்மாநிலத் தலை நகரங்களில் நேற்றுதர்ணா போராட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையவளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர்எம்.கிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.
அரசு ஊழியர்களின் அக விலைப்படியில் 50 சதவீதத்தைஅடிப்படை ஊதியத்துடன் இணைப்பது என்பது தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் 50 சதவீத அகவிலைப்படி அடிப்படைஊதியத்துடன் இணைக்கப்படும் என்பது மத்திய அரசுஏற்றுக் கொண்ட கோரிக்கையாகும். ஆகவே, ஏற்றுக் கொண்ட கோரிக் கையைஅமல்படுத்தக் கோரி இன்று நாடுமுழுவதும் மத்திய அரசு ஊழியர்கள்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஊழியர்களின்நலன்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசுசெயல்படுவதால் இன்று அனைத்துத் துறைஊழியர்களும் ஓரணியில் திரளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்துடன்இணைந்து போராட முன்வந்துள்ளன.
இந்நிலையில்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி முடிவு செய்வதற்காகமத்திய அரசு ஊழியர் சங்கங்களின்சிறப்பு மாநாடு டிசம்பர் 11-ம்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் மூலம்மத்திய அரசு ஊழியர்களின் வலிமைநரேந்திர மோடி அரசுக்கு உணர்த்தப்படும்என்றார் கிருஷ்ணன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்மேள னத்தின் மாநிலத்தலைவர் ஜே.ராம மூர்த்தி, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கபொதுச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியன்உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளைவிளக்கிப் பேசினர்.

No comments:

Post a Comment