Pages - Menu

Monday, 27 October 2014

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.24-ல் தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 24-ல் தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சரவையை விரிவுபடுத்தவும், சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானதால் இந்த கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இதுகுறித்து 'தி இந்து'விடம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த 5 மாதங்களாக பிரதமர் மோடி தனது அமைச்சரவை உறுப்பினர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார். அதில் சிலர் தமது அமைச்சகங்களை இன்னும்கூட புரிந்து கொள்ளாமல் திணறி வருவதால் அவர்களுக்கு அமைச்சகம் மாற்றி அளிக்கப்பட உள்ளது" என கூறியிருந்தார்.

No comments:

Post a Comment