Pages - Menu

Friday, 8 August 2014

பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார்அப்போதுபேசிய அவர்தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில்
 கட்டணம் வசூலிக்கப்படுகிறதுஅவற்றை முறைப்படுத்த வேண்டும்மேலும்பி.எட்படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறதுஅது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.

இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த 
பதில்:
பி.எட்படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்ததுஇப்போதுஓய்வு பெற்ற நீதிபதி என்.விபாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளதுஅதன்படிஅரசு பி.எட்கல்லூரிகளில் ரூ.2,250-ம்அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும்தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம்தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்பி.எட்படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாகதேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறதுஅதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

No comments:

Post a Comment