Pages - Menu

Thursday, 14 August 2014

சம்பள உயர்வின்றி ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வித் திட்ட ஊழியர்கள் புலம்பல் -தினமலர்

சிவகங்கை : ""முறையான சம்பள உயர்வின்றி, குடும்பத்தை நடத்த வழியில்லாமல் தவிப்பதாக'' ஆர்.எம். எஸ்.ஏ.,கல்வித் திட்ட ஊழியர்கள் புலம்புகின்றனர்.


தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் டேலி மேலாளர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், இன்ஜினியர் என்ற பிரிவுகளில் முறையே ரூ.7,500, 6000, 12,000 சம்பள விகிதாச்சாரத்தில் 750க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

முறையான சம்பள உயர்வின்றி குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். சம்பள உயர்வு கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என, புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் இதே பிரிவு ஊழியர், இன்ஜினியர்களுக்கு சமீபத்தில் ரூ.3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை சம்பளம் உயர்வு அளிக்கப் பட்டது. இதே போன்று சம்பள உயர்வு வழங்க வேண்டும் என, ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வி திட்ட ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழியர்கள் சிலர் கூறுகையில், ""எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம். எஸ்.ஏ., இரு திட்டமும் கல்வி, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை செய்கிறது. இவற்றில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி, ஆசிரியர் பயிற்சி, பி.எச்.டி., இன்ஜினியர், கம்ப்யூட்டர் பயிற்சி, டைப் முடித்தவர்கள் என, பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகிறோம். குறைந்த மாத சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கிறோம்.

வாரத்தில் 3 நாள் மட்டுமே பணி என்ற நிலையில், 2010ல் பணியில் அமர்த்திய சிறப்பு ஆசிரியர்களுக்கு கூட, ரூ.2 ஆயிரம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2009ல் முதல் ஆர்.எம். எஸ்.ஏ., திட்டத்தில் பணிபுரியும் எங்களுக்கு சம்பள உயர்வு இன்றி வஞ்சிக்கப்படுகிறோம்,'' என்றனர்.

No comments:

Post a Comment