இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
2014-2015ஆம்கல்வியாண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாகபழங்குடியினத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள்தங்களைக் தற்காத்துக் கொள்ள வழிவகை செய்யும்பொருட்டு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும்தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தேபயிற்சி 14 இலட்சம் ரூபாய் செலவில்அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்என்பதற்காக, பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2013-2014ஆம்கல்வியாண்டில் முதன்முறையாக விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 10 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர். அதன் தொடர்ச்சியாக, 2014-2015ஆம் கல்வியாண்டில்100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் செலவில்விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment