Pages - Menu

Friday, 25 July 2014

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மலை கிராம பள்ளிகளுக்கு சரியாகசெல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரிஉள்ளிட்ட மாவட்டங்களில்
மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதிஇல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
சில பள்ளிகளுக்கு குதிரை மூலம் மட்டுமேசெல்ல முடிகிறது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள்பள்ளிகளை ஆய்வு செய்வதில்லை. மொபைல்போன் சிக்னல் -ம் சரியாக கிடைக்காததால், ஆசிரியர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமம்உள்ளது. இதை பயன்படுத்தி சிலஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்கு செல்வதில்லை.
அதேபகுதியைசேர்ந்த படித்த இளைஞர்கள் மூலம்பாடம் நடத்தசொல்லி, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கின்றனர். இதனால்மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், காடுகளில் வேலைக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மலைகிராம பள்ளிகளுக்கு சென்று ஆய்வுநடத்த வேண்டும். வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பிட்டநேரமாவது பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சரியாக பள்ளிக்கு செல்லாதஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்குகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment