Friday, 18 July 2014

புதிதாக எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் செப்டம்பர் 1-ந் தேதி திறப்பு


சென்னை, ஜூலை.19-தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான இடங்கள் 2 ஆயிரத்து 380 உள்ளன.
அந்த இடங்களுக்கு கடந்த மாதம் 18-ந்தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி 23-ந்தேதி முடிவடைந்தது. 2-வது கட்ட கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைகிறது. இந்த கலந்தாய்வில் 240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் 1-ந்தேதி வகுப்புகள் திறக்கப்படுகின்றன.ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதியே வகுப்புகள் திறக்கப்பட்டன. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி செப்டம்பர் 1-ந்தேதி மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

0 comments:

Post a Comment