Pages - Menu

Monday, 9 June 2014

பெயரின் 'இன்ஷியல்' ஆங்கிலத்தில் எழுத தடை

அரசு பள்ளி ஆசிரியர்கள்
தங்களது பெயர் 'இன்ஷியலை'
ஆங்கிலத்தில் எழுத கல்வித்துறை தடை விதித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
தங்களது பெயர்களின் 'இன்ஷியலை', தமிழில்
எழுத வேண்டும் என்ற
அரசானை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களின்
'இன்ஷியலை'
தொடர்ந்து ஆங்கிலத்திலேயே எழுதி வருகின்றனர்.
இதையடுத்து தொடக்க கல்வித்துறை இயக்குனரகம்,
மாவட்ட
கல்வி அலுவலர்களுக்கு நடப்பு ஆண்டிற்காக
பிறப்பித்துள்ள விதிமுறையில், ஆசிரியர்கள்
அனைவரும் தங்கள் 'இன்ஷியலை' தமிழில்
எழுதவேண்டுமென மீண்டும்
வலியுறுத்தியுள்ளது. ஆங்கிலத்தில்
எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment